Lushgreen

ஆர்யன் கானுக்காக வாதாடப் போவது இந்த வழக்கறிஞரா? இவருடைய பீஸை கேட்டாலே மயக்கம் வந்துரும் போலயே!

Oct 11 2021 12:29:00 PM

இந்திய சினிமா முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் இது தான். ஆர்யன் கான் போ தை மருந்து பயன்படுத்தி மாட்டிக்கொண்ட வழக்கில் எப்படி வெளியே வரப்போகிறார் என்பது பற்றி தான் தற்போது எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல, இந்தியாவின் மிகச் சிறந்த வழக்கறிஞர் ஆர்யன் கானுக்காக வாதாடப்போகிறார் என்கிற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

sanjay dutt aryan khan vakkil sathish

கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட சதிஷ் மானேசென்டே தற்போது மும்பையில் மூத்த வழக்கறிஞராக இருக்கிறார். இவர் 10 வருடங்கள் இந்தியாவின் மிகச்சிறந்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானியிடம் பயிற்சி பெற்றுள்ளார். அவரிடம் இருந்து எல்லா சட்ட நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு தற்போது மும்பையின் முன்னணி வழக்கறிஞராக வளம் வருகிறார்.

sanjay dutt aryan khan vakkil sathish

இவர் ஏற்கனவே சல்மான் கான் வழக்கில் சல்மான் கானுக்கு ஆதரவாக களமிறங்கி அவர் த ண்டனையில் இருந்து வெளிவர உதவினார். அதேபோல சஞ்சய் தத் வழக்கிலும் சஞ்சய் தத்திற்கு ஆதரவாக களமிறங்கி அவருக்கு ஜாமீன் வாங்கிக்கொடுத்தார். பாலிவுட் பிரபலங்கள் எதாவது சர்ச்சையில் சிக்கினாலும், வழக்குகளில் மாட்டினாலும் அவர்களை காப்பாற்றும் வழக்கறிஞர் இவர் தான். நம்மை போன்ற சாதாரண ஆட்கள் இவரின் பக்கத்தில் கூட செல்ல முடியாது.

sanjay dutt aryan khan vakkil sathish

மிகப்பெரிய பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள் மட்டும் தான் இவரிடம் செல்ல முடியும். ஒரு முறை ஆர்யன் கானுக்காக நீதிமன்றத்துக்கு சென்று வாதாடுவதற்கு 10 லட்சம் ரூபாய் பீஸ் வசூலிக்கிறார். அதான் ஷாருக் கான் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார், 10 லட்சம் எல்லாம் அவருக்கு டிப்ஸ் கொடுக்குற மாதிரி, பையன் வழக்கில் இருந்து வெளியே  வந்தால் போதும் என்று ஷாருக் கான் நினைப்பதாக திரைத் துறையில் பேசிக்கொள்கிறார்கள்.

sanjay dutt aryan khan vakkil sathish