தனிமை எனும் சாபம்…
  • 12:23PM Nov 14,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 12:23PM Nov 14,2017 Chennai, Tamil Nadu 600003, India

உலகில் உள்ள அனைத்திலும் கொடுமையானது என்று விஞ்ஞானிகள் தற்போது எதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் தெரியுமா??? தனிமை. இது எங்களுக்கெல்லாம் முன்னாடியே தெரியும்னு சொல்றீங்களா, என்ன பன்றது, சில பேரு கல்லை மேல தூக்கிப் போட்டா கீழ விழும்னு சொன்னாக் கூட, நீயென்ன பெரிய சயின்டிஸ்ட்டா என்று கலாய்க்கிறார்கள்.  அதுவுமில்லாம, இப்போல்லாம் எதெதுக்கல்லாம் ஆராய்ச்சி பன்றதுங்கற வரைமுறையே இல்லாம ஆராய்ச்சி பண்ணிட்டிருக்காங்க.  சில ஆண்டுகளுக்கு முன் பாறைக்கடியில் பாசி என்ற தலைப்பில் 10 மில்லியன் டாலர் செலவில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு, வளராதுன்னு சொல்லிருக்காங்க.  நம்ம ஊரு டவுசரு பாண்டிகிட்ட 10 ரூபா தரேன்னு சொல்லிருந்தா அதுவே சொல்லிருக்கும்!!!

சரி, விஷயத்துக்கு வருவோம்.  உலகளவில அதிக உயிர்களைப் பலி கொள்ளும் ஒரு கெட்ட பழக்கம் அல்லது வியாதி தனிமைன்னு இப்போ விஞ்ஞானிகள் புள்ளி விபரத்தோட நிரூபிச்சிருக்காங்க.  இனிமே யாராச்சும் அவங்க புள்ளைங்களைப் பத்தி சொல்லும் போது, பய இருக்கிற இடம் தெரியாதுன்னு சொன்னா ஜாக்கிரதையா இருங்க, ஏன்னா இந்த வகை தன்னை மட்டுமல்ல, தன்னிடம் அன்பாக நடக்க முயற்சி செய்கிறவரையும் (எங்க ஏரியா உள்ள வராதே டைப் எரியா – கம்போர்ட் ஜோன் பிரச்சனை!!!) காயப்படுத்திடும், சமயத்துல உயிருக்கே உலை வைச்சிடுமாமா… (அடிக்கடி பிக்பாஸ்ல சிநேகன் நோஸ் கட் வாங்குனது இதனாலதான் போலிருக்கு!!!)

இந்த வகை மனிதர்கள் பொதுவாக எளிதாக உணர்ச்சிவசப்பட்டாலும், வெளியே காமிச்சுகாமயே இருப்பாங்க… தனிமையைப் பிடிக்காது, அதே சமயம் கூட ஆளிருந்தாலும் ஜெர்க் ஆவாங்க.  சுலபமா சிகரெட்ல ஆரம்பிச்சு, மளமளன்னு போதைப் பொருள் வரைக்கும் போற TENDENCY இவங்ககிட்ட கொஞ்சம் அதிகமாவே இருக்கும்.  அதே மாதிரி சாடிஸம், சைக்கோ விஷயங்கள் தீவிரமா அட்ராக்ட பண்ணும். இதன் காரணமாகவே, ப்ளு வேல் மாதிரியான விளையாட்டுக்கள் ரொம்பவே பிரபலமாகிறது.  தன்னை வருத்திக் கொள்ளுதல், அதீத பிடிவாதம், குரூரம் போன்ற குணங்கள் இவங்களிட்ட அதிகமா காணப்படுறதுக்கான காரணங்கள் – தனியா இருக்கிற மூளை சும்மா இருக்காது. அது பிரமைகளை தோற்றுவிக்கும் (HALLUCINATIONS). அந்த பிரமைகள் கொஞ்சம் கொஞ்சமா நல்லது கெட்டதுன்னு தடுமாறி, கடைசில மனிதன் அவ்வளவு சீக்கிரமா வெளிக்காட்டாத, வெளிக்காட்ட விரும்பாத குணமான மிருக குணத்தை வெளியே கொண்டு வந்திடுது.

ப்ளுவேல் விளையாட்டைக் கண்டுபிடிச்சவன் கிட்ட விசாரணை பண்ணும்போது அவன் சொன்ன ஒரு விஷயம் அதிர்ச்சியளித்தாலும், கொஞ்சம் சிந்திக்கவும் வேணுங்கற மாதிரி ஒரு விஷயத்தின் வெளிப்பாடு. அவன் சொன்னது, இதுல செத்துப் போறதெல்லாம் சாகட்டும். இந்தக் குணாதிசயம் இருக்கிறதுங்க உயிரோட இருந்தும் எதையும் சாதிக்க போறதில்லை.  அதான் இப்படி ஒரு வழியைக் கண்டுபிடிச்சேன்னு சொல்லியிருக்கான்.  இனிமேலயம் நம்மைச் சுற்றி இருக்கிறவங்க யாராவது கொஞ்சம் தனிமை விரும்பிகளா தெரிஞ்சா, கொஞ்சமா பேச்சுக் குடுத்து நார்மலாக்க முயற்சி செய்யுங்க.  சிநேகன் அளவுக்கு முயற்சி செய்ய வேண்டாம், கடைசில உங்களை தனியாக்கிடுவாங்க, ஜாக்கிரதை.

தன்னை யாருக்கும் பிடிக்கலைன்னோ, தான் செய்த ஒரு செயலால ஏற்படுகிற குற்ற உணர்ச்சி, இவையெல்லாம் தனிமையை நாட மூல காரணமா ஆயிடுது.  கூடுமான வரை அப்படி அடுத்தவனை ஆக விடாம இருக்கிறதுதான் நமக்கு நல்லது… ஏன்னு கேட்கறீங்களா??? அதான் சொன்னனே, அவங்க தன்னை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் காயப்படுத்தும் தண்மையுடையவர்கள்னு.

தனிமை ஒரு சாபம், சரியான புரிந்து கொள்ளுதல் முலம் உங்களாலும் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்… செய்வீர்களா???    

Top