சென்னை எனும் தண்ணீர் தொட்டி…
  • 10:40AM Sep 13,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 10:40AM Sep 13,2017 Chennai, Tamil Nadu 600003, India

முன்பெல்லாம் விடாது இரண்டு மூன்று நாட்கள் மழை பெய்தால் மட்டுமே சென்னையில் தண்ணீர் நிரம்பி வழியும்.  இரு வருடங்களுக்கு முன் ஒரு மிகப்பெரிய வெள்ளம் வந்து சென்னையையே ஸ்தம்பிக்க வைத்தது.  ஒருவாறாக வெள்ளம் வடிந்து, மக்கள் தங்கள் இழப்புகளை மறந்து இயல்பு நிலைக்குத் திரும்பினர்.  இருப்பினும், அந்த வெள்ளம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைவரின் மனதினுள்ளும் பதிந்திருப்பதை இப்பொழுதும் கூட நம்மால் உணர முடியும்.  ஆனால் சமீபத்தில் பெய்யும் மழைகளில், ஒரு நாளில் சென்னை நிரம்புவதை நம்மால் பார்க்க முடிகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன் இரண்டு நாட்கள் மழைக்குப் பின் அதிகரித்த நீரின் அளவை இரண்டு மூன்று நாட்களுக்கு முன், இரவு பெய்த மழையால் காண முடிந்தது. தினமும் தண்ணீர் அளவு ஏறுவதும் இறங்குவதுமாக - எதனால் இப்படி ஏற்படுகிறது?

வெள்ளத்திற்கு முன்பாகவே சென்னையில் பழைய வடசென்னை தவிர மற்ற பகுதிகளில் ஒழுங்காகச் செயல்படாத அதிகாரிகளின் அலட்சியத்தால் மேன்ஹோல்கள் மற்றும் வடிகால் குழாய்கள் இரண்டும் ஒன்றாகி விட்டிருந்தன.  அதாவது ஒரு சிறிய தெருவுக்கு சராசரியாக இரண்டு மேன்ஹோல் இருக்க வேண்டும், தனியாகத் தெருவின் நீளத்திற்கேற்ப நீர் வடிகாலும் இருந்தாக வேண்டும்.  ஆனால் அவை அனைத்தும் சரிவர நிர்மாணிக்கப்படாமலேயே அனுமதி வழங்கப்பட்டு, தற்போது வேறு வழியின்றி நீர் வடிகாலையும் மேன்ஹோலுடன் இணைக்கும் நிலை உருவாகி விட்டது. தற்போது மேன்ஹோல்களுமே பற்றாக்குறையாகத்தான் உள்ளது.

நகர வடிவமைப்புத் துறை அதிகாரிகள்தான் இவ்வாறென்றால், சாலைப் போக்குவரத்து துறை அவர்களையும் மிஞ்சி விடுவார்கள் போல… வெள்ள நிவாரணம் மற்றும் புயல் நிவாரணத்தின் போது வந்த நிதியில் அவசர அவசரமாய் சாலை போட்டு மேன்ஹோல் மற்றும் நீர் வடிகால் எங்கே என்று கூடத் தெரியாமல் சாலைக்கடியில் புதைத்து விட்டார்கள் -  மேலோட்டமாக ஒரு சின்னக் குழி மட்டும் வைத்துவிட்டு… மூடியில் இருக்கும் சின்ன துவாரங்களும் – மண், தார் போன்றவற்றால் அடைக்கப்பட்டதால், தண்ணீர் வெளியேற வழியின்றி, ஏறக்குறைய பக்கெட்டில் நீர் பிடிப்பது போன்று விரைவாகத் தண்ணீர் நிறைய வழியாகி விட்டது,

இப்பொழுது சொல்லுங்கள் – சென்னை ஒரு தண்ணீர் தொட்டிதானே??? கூடிய விரைவில் வீட்டிற்கு ஒரு பைக் வாங்குவதைப் போல, வீட்டிற்கு ஒரு மிதவை வாங்கும் நிலை வந்தால் ஆச்சரிப்பட வேண்டியதில்லை…

  

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top