குப்பை எனும் பொக்கிஷம்!!!
  • 15:03PM Nov 09,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 15:03PM Nov 09,2017 Chennai, Tamil Nadu 600003, India

என்னது குப்பையைப் பத்தியெல்லாம் ஒரு கட்டுரையான்னு நீங்க நினைச்சீங்கன்னா உங்களுக்கு நாட்டு நடப்பு ஒண்ணுமே தெரியலைன்னு அர்த்தம். உண்மையிலேயே நாம தூக்கி எறியற குப்பையை ஒழுங்கா பயன்படுத்தினாலே அது பெரிய பொக்கிஷமாய்டும். அதோட மதிப்பு தெரியாம நாமதான் அதை வீணடிச்சுட்டு இருக்கோம்.  குப்பைல நிறைய வகை இருக்கு. மக்கும் குப்பை, மக்காத குப்பை, தொழிற்சாலைக் குப்பை, எலெக்டரானிக் குப்பை இந்த மாதிரி.   

மக்கும் குப்பை:

மண்ணுல போட்டா கொஞ்ச நாளிலே மக்கப் போற எல்லாமே மக்கும் குப்பைதான். இந்த மக்கும் குப்பை உரம் தயாரிக்க, மண் புழு வளர்ப்பு, பயோ டீசல் உற்பத்தி, - காகிதமா இருந்தா ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் தயாரிப்புன்னு பல விஷயத்துக்குப் பயன்படுத்த முடியும்.  குறைந்தபட்சம் கால்நடைத் தீவணமாப் பயன்படும்.

மக்காத குப்பை:

இதில் முக்கியமானது ப்ளாஸ்டிக். பெரும்பாலும், ப்ளாஸ்டிக் பொருட்கள் அனைத்துமே மறுசுழற்சி செய்து வேறு பொருளா மாத்திட முடியும். கீழே போட்டா எகிறும் தன்மையுள்ள ப்ளாஸ்டிக்தான் குடம், நூல்கண்டு கோன் இதையெல்லாம் தயாரிக்கப் பயன்படுது. அது மட்டுமில்லாமல் ப்ளாஸ்டிக் சாலைகள் அமைக்கவும் முயற்சி செய்யப்பட்டு வருகிறது.  அது நிறைவேறும் பட்சத்தில் மிக அதிகமான விலைக்குப் போகும் இது.

தொழிற்சாலைக் குப்பை:

ஸ்கிராப்.  அதுலயும் இரும்பு, மெக்னசியம், தாதுப் பொருள்ன்னு நிறைய எடுத்து விற்பனை செய்ய முடியும்.  பெரும்பாலான உதிரிப்பாகங்கள் மறுசுழற்சிக்குக் கண்டிப்பாக ஒத்து வரும்.

எலெக்டரானிக் குப்பை:

நமக்கு தெரிஞ்சு காந்தம், வயரில இருக்கிற செம்பு, அதெல்லாத்தையும் விட சர்க்யூட் போர்டுகள்ல இருக்கிற வெள்ளி, தங்கம் போன்றவை ஒரு சிறிய முயற்சிக்கு பின் எடுக்கப்படுது. விஷயம் தெரிஞ்சவங்க இந்தப் பொருட்களையெல்லாம் எவ்வளவு கம்மியா வாங்க முடியுமோ வாங்கிக்குவாங்க.

மருத்துவக் கழிவுகள் மட்டும் உடல்நலம் சார்ந்த விஷயங்கறதால மறுபயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாதுன்னு அரசாங்கம் சொல்லியிருக்கு. பெரிய இயந்திரங்களில் கதிர்வீச்சு அபாயம் இருக்கிறதால அவையும் இந்தக் குப்பை பட்டியலுக்கு வராது.

இத்தனை விஷயம் இருக்கு நாம வீசி எறியற குப்பைல… அப்போ அரசாங்கம் ஏன் இதெல்லாம் பண்ணலைன்னு கேட்டா, ஒரே ஒரு காரணம்தான்.  நாம பிரிச்சு போடறதில்லை.  எல்லாத்தையும் ஒண்ணா கலந்த பிறகு அதைப் பிரிக்கிறதுக்கு ஆகிற செலவு அதுல கிடைக்கிறதை விட ரொம்ப ஜாஸ்தி. அதுனாலதான் விஷயம் என்னான்னு சொல்லாம் அரசாங்கம் பிரிச்சுப் போடுங்க, பிரிச்சுப் போடுங்கன்னு கெஞ்சிட்டே இருக்காங்க… உங்களுக்கு விஷயம் புரிஞ்சதுன்னா, அப்புறம் நீங்களும் குப்பையைப் போடுறதுக்கு காசு கேப்பீங்க இல்லை… சும்மா இம்புட்டு காசு, யாரு தருவா???    

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top