#FCI: Food Corporation of India நிறுவனத்தில் இந்தியா முழுவதும் காலியிடம் : அவ்வப்போது வரும் அரிதான உயர்பதவி அறிவிப்பு!
  • 15:56PM Oct 02,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 15:56PM Oct 02,2019 India

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களிள் ஒன்றாக விளங்கும் Food Corporation of India நிறுவனத்தின்  கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் வடகிழக்கு மண்டலங்களில் நிரப்பப்பட உள்ள 304 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

#1. தெற்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள்: 65

#2. வடக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் காலியிடங்கள்: 187

#3. மேற்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள்: 15

#4. கிழக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள்: 37

#5. வட கிழக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள்: 26

#6. அனைத்து பணியிடங்களுக்கும் மாதம் ரூ. 40000 முதல் 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

#7. ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

#8. ரூ.800 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

#9. http://www.fci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

#FCI: மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.recruitmentfci.in/category_two_main_page.php… என்ற லிங்கில் சென்று பார்க்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 27.10.2019

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top