#Yamraj ரயில் தண்டவாளம் கடப்பவர்களைக் கதிகளங்கவைக்க மேற்கு ரயில்வேவின் புதுமுயற்சி!
  • 20:32PM Nov 08,2019 Western Railway Head Office
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 20:32PM Nov 08,2019 Western Railway Head Office

கடந்த 2015 முதல் 2017-ம் ஆண்டு வரையில் மட்டும் ரயில் தண்டவாளத்தைக் கடக்கமுயன்று 50,000 பேர் இருந்துள்ளதாக மத்திய ரயில்வே துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சீக்கிரம் ரயில் பிடிக்கவேண்டும் என்ற அவசரத்திலும், சுலபமாகப் பிளாட்போர்ம் கிராஸ் செய்துவிடலாம் என்று எண்ணி இப்படி ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். இதுபோன்ற இழப்புகள் நேரிடக்கூடாது என்பதற்காக அணைத்து ரயில்வே துறையினரும் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கு ரயில்வே துறையினர் பொதுமக்களுக்குத் தண்டவாளத்தைக் கடிப்பதால் ஏற்படும் ஆபத்துகளைப் புரியவைக்கவேண்டும் என்பதற்காகப் புதுவழியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

#DilipGhosh பாலில் தங்கம் இருப்பதால், அடகுக்கடைக்கு மாட்டுடன் வந்த வலிபர்! பிஜேபி தலைவரால் புதுப் பிரச்சனை!

மேற்கு ரயில்வே துறையினருக்கு உட்பட்ட அந்தேரி மற்றும் மலட் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் தண்டவாளத்தைக் கடக்காமல் பார்த்துக்கொள்ள எமராஜனை நியமித்துள்ளனர். அதாவது யமதர்மனை போல வேடமிட்ட ரயில்வே காவல் அதிகாரி பொதுமக்கள் யாராவது தண்டவாளத்தைக் கடக்க முயற்சி செய்தால் அவர்களைக் கையேடு அழைத்து வந்து பிளாட்போர்மில் விடுகின்றனர். அதேபோல ட்ரைனில் இந்தத் தண்டவாளத்தில் குதிப்பவர்களை அப்படியே அலேக்காகத் தூக்கிவந்து பிளாட்போர்மில் விடுகின்றனர். சிலர் இவர்களைப் பார்த்ததும் தண்டவாளத்தைக் கடக்கமுயற்சிக்கவில்லையாம்.

இதுகுறித்து மேற்கு ரயில்வே துறையின் மேலதிகாரி கூறுகையில், மக்களிடம் ரயில்வே தண்டவாளத்தைக் கடப்பது குறித்த விழிப்புணர்வு இல்லை. அவர்கள் அவசரத்திற்குக் கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடக்கின்றனர். ஆபத்து என்று தெரிந்தும் இவர்கள் செய்யும் தவறு அனைவரையும் பாதிக்கிறது. எனவே அவர்களுக்கு ஆபத்துப் புரியவேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டோம், நங்கள் எதிர்பார்ப்பது போல மக்களுக்குத் தண்டவாளத்தைக் கடிப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டாலே போதும் என்று தெரிவித்துள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top