#Entrepreneurship : சம்பளமே வேண்டாம் - படிச்சு முடிச்ச உடனே மாசம் இலட்சம் ரூபாய் இலாபம் மட்டுமே பார்க்கனுமா..?
  • 19:24PM May 20,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 19:24PM May 20,2019 Tamil Nadu

தொழில்நுணுக்கம் தெரிஞ்சவங்க திருப்பூர் பக்கமோ, ஈரோடு பக்கமோ போயி ஒரு ரெண்டு, மூணு வருஷம் வேல செஞ்சா போதும். அதுக்கு அப்புறம் அதுல கிடச்ச அனுபவத்த வெச்சு சொந்தமா ஒரு தொழில் தொடங்கிருவாங்க. திருப்பூர்ல இன்னைக்கு பாதிக்கும் மேல பனியன் கம்பெனி இப்படி தான் உருவாச்சு. கொஞ்சம் ஆர்வமும், சாதிக்கணும்னு வெறி இருந்தா போதும், சொந்தமா தொழில் செஞ்சு பிழைக்க ஆயிரம் வழி இருக்கு. அந்த மாதிரி இப்ப இருக்க இளைஞர்களும் தொழில் தொடங்க மத்திய அரசு சில படிப்புகள் தொடங்கி, அது மூலமா தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்ப்படுத்தி கொடுக்கறாங்க. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் Rajiv Gandhi National Institute of Youth Development சென்னை பக்கத்துல ஸ்ரீபெரும்புதூரில் இருக்கு. இங்க தான் ஆடை வடிவமைப்பு குறித்து முழு நேர படிப்பவே சொல்லி தராங்க.

#1. மத்திய அரசின் முக்கிய தொழில்பயிற்சி மைய நிறுவனமான இதில், தற்போது, B.Voc. Apparel Manufacturing & Entrepreneurship மற்றும் B.Voc. Fashion Design & Retail உள்ளிட்ட Undergraduate வொகேஷனல் படிப்புகளுக்கு அட்மிஷன் அறிவித்துள்ளது.

#2. பிளஸ்-2 படித்த மாணவர்கள் இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூன் 8 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் இணையதளம் வழியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

#3. அதில் தேர்ச்சி பெறுபவர்கள் தொழில்பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். விரிவான விவரங்களுக்கு www.rgniyd.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

#Entrepreneurship : வெறும் அனுபவம் மட்டுமே வெச்சு நிறைய பேரு ஆடை வடிவமைப்பு துறையில தொழில் தொடங்கி பெரிய நிலைமைக்கு வந்து இருக்காங்க. அனுபவத்தோடு சேர்ந்து, முறையான படிப்பும் இருக்க இந்த மாதிரியான படிப்புகள் முடிச்சிட்டு தொழில் தொடங்கும் போது, இன்றைய இளைஞர்கள் அடுத்தவங்களுக்கு வேலை கொடுக்கற அளவுக்கு முன்னேருவாங்க.

Share This Story

முருகானந்தம்

Top