Worlds Youngest Self-made Billionaire யார் தெரியுமா?
  • 16:08PM Mar 07,2019 United States
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 16:08PM Mar 07,2019 United States

போர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டின் உலகின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது, இதில் தற்போதைய Worlds Youngest Self-made Billionaire யார் என்பதையும் வெளியிட்டுள்ளது. இதுவரை Worlds Youngest Self-made Billionaire ஆக இருந்தவர் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க், தற்போது இவரின் இடத்தை தட்டிப்பறித்திருப்பவர் அமெரிக்க மாடல் அழகியும், தொலைக்காட்சி நடிகையுமான கெய்லி ஜென்னர். 21 வயதாகும் இவரின் தற்போதைய சொத்துமதிப்பு 100 கோடி டாலர் ஆகும்.

Related image

கடந்த 2015-ம் ஆண்டு இவர் தொடங்கிய Kylie Cosmetics பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த அழகு சாதன நிறுவனத்தை தொடங்கி மூன்றே வருடத்தில் பெரும் லாபத்தை சம்மதித்துள்ளார், கடந்தாண்டு மட்டும் இந்த நிறுவனம் 360 மில்லியன் டாலர் லாபம் எட்டியுள்ளது. உலகபணக்காரர்கள் பட்டியலில் கெய்லி ஜென்னர் 2,057 இடத்தில் உள்ளார். இவர் அழகு சாதன நிறுவனத்தில் மட்டுமின்றி மாடலிங், தொலைக்காட்சி நிகழ்ச்சி தகுப்பாளர் ஆகவும் சம்பாதித்து வருகிறார். இவரது சகோதரி கிம் கர்தாசியானும் உலகபணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Top