#Mom பசியில் கதறிய குழந்தையின் அழுகையைக் கேட்டு, கோமாவில் இருந்து எழுந்த தாய்!
  • 18:08PM Jun 01,2020 Argentina
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 18:08PM Jun 01,2020 Argentina

கண்ணே திறக்கமாட்டார் என்று கூறிய கோமா நோயாளி தனது குழந்தையின் பசி அலறலை கேட்டு எழுந்த அதிசயம் அர்ஜென்டினாவில் நடந்துள்ளது. அர்ஜென்டினா நாட்டின் வடக்கு மாகாணமான கோர்டோபாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்தவர் 42 வயதாகும் மரியா லாரா பெர்ரேயரா. 3 குழந்தைகளுக்குத் தாயான இவர் கடந்த மாதம் வாகனத்தில் சென்றபோது மர்ம நபரால் தாக்கப்பட்டுத் தனது சுயநினைவை இழந்தார்.

பல நாட்கள் தீவிர சிகிச்சை கொடுத்ததும் பெர்ரேயராவுக்குச் சுயநினைவு திரும்பவில்லை, இதனால் இனி அவரைக் காப்பற்றுவது கடினமான விஷயம், அவரது உடல் பாகங்களைத் தானமாகத் தரலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும் தனது மனைவியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று பெர்ரேயராவின் கணவர் மார்ட்டின் டெல்கடோ முயற்சித்தார். இவர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகப் பெர்ரேயராவுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் மருத்துவமனைக்கு வந்த பெர்ரேயராவின் 2 வயது இளைய மகள் பாசத்துடன் அவர் அருகில் சென்று படுத்தார்.

பின்னர்ச் சிறிது நேரம் கழித்துத் தனது தாயின் அவல நிலையை அறியாத அந்தக் குழந்தை தனது தாயை கட்டி அணைத்துக் கொண்டு தனக்குப் பசிக்கிறது எனக் கூறி தாய்ப்பால் கேட்டு அழத்தொடங்கியது. அப்போது சுமார் 30 நாட்கள் சுயநினைவின்றி இருந்த பெர்ரேயரா தன் குழந்தையின் பசி குரல் கேட்டவுடன் சட்டென்று கண் விழித்துத் தாய்ப்பால் கொடுத்தார். இதைப் பார்த்த பெர்ரேயராவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஆச்சரியத்தில் உறைந்தனர். ஆனால் இந்தச் சந்தோசம் நீண்டநேரம் நிலைக்கவில்லை. குழந்தைக்குப் பால் கொடுத்து முடிந்ததும் பெர்ரேயரா மீண்டும் கோமாவுக்குச் சென்று விட்டார். எனினும் அவர் கண்முழித்ததால் எப்படியும் கோமாவில் இருந்து விரைவில் குணமடைவர் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top