#NavarHerbert திருமணமான மறுநாளே உயிரிழந்த கணவர்! சோகமும், சந்தோஷமும் கலந்த மனைவி! ஏன்னு தெரியுமா?
  • 16:18PM Jul 02,2019 New Zealand
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 16:18PM Jul 02,2019 New Zealand

நியூஸிலாந்தின் குயின்லாந்து பகுதியை சேர்ந்தவர் Navar Herbert. ரக்பி விளையாட்டு வீரரான இவர் உள்ளூர் ரக்பி விளையாட்டு கிளப்பான Nerang Bulls-ன் சார்பாக விளையாடி வந்துள்ளார். நியூஸிலாந்தின் ரக்பி விளையாட்டு அணிகளுக்கு இவரைப் பற்றி நன்றாகத் தெரியும். சிறுவயதில் இருந்தே ரக்பி விளையாடி வருகிறார். 22 வயதாகும் இவர், Maia Falwasser என்ற 20 வயது பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 11 மாத குழந்தையும் உள்ளது. இருவரும் காதலித்து வந்த காரணத்தால் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த வருடம் Navar மூளையில் ஏற்பட்ட கட்டியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, Cancerous Sarcoma Tumour என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தனக்கு ஏற்பட்டிருக்கும் நோயால் Navar மிகுந்த மனபாதிப்பு அடைந்தார். நாட்கள் ஓடஓட Navar-ன் நிலை மோசமான சூழ்நிலையை அடைந்தது.

Navar-ன் நிலையைப் பார்த்த Maia மிகுந்த மனக்கவலை அடைந்தார். அவர் எவ்வளவு முயற்சித்தும் Navar-ன் முகத்தில் சிரிப்பை பார்க்கமுடியவில்லை. கடந்த 3 மாதத்திற்கு முன்பு Navar தானாக எழுந்து நடக்கமுடியாத சூழ்நிலையை எட்டினர். அவரைக் காப்பாற்றவேண்டும் என்று Maia எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகியது. கடைசியாக ஒன்றாக வாழமுடியாவிட்டாலும் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு Maia கேட்டுக்கொண்டார். முதலில் மறுப்பு தெரிவித்த Navar பின்பு Maia மனமுறுகி கேட்டுக்கொண்டதால் திருமணத்திற்குச் சம்மதித்தார். இதனைத் தொடர்ந்து நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் கடந்த வாரம் Navar மற்றும் Maia-வுக்குத் திருமணம் நடந்தது. இவரது ரக்பி குழுவினர்கள் திருமணத்தில் கலந்துகொண்டு உற்சாக நடனமும் ஆடினார்கள். மனதில் பல்வேறு சோகங்கள் இருந்தாலும் அன்றைய தினம் சோகத்தை மறந்து Navar-ன் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருந்தனர், ஆனால் இந்த மகிழ்ச்சி ஒருநாள் கூட நிலைக்கவில்லை. திருமணம் நடந்து முடிந்த மறுநாளே Navar உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். Navar இல்லாவிட்டாலும் அவரது நினைவுடன் தான் தனது மீதி வாழ்க்கையை வாழப்போவதாக 20 வயது Maia தெரிவித்துள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top