#Bedspread Secret: எழுந்ததும் படுக்கையை மடித்து வைக்கச்சொல்வது ஏன்?
  • 19:55PM Oct 14,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 19:55PM Oct 14,2019 Kodambakkam

பல ஆண்டுகளுக்கு முன்பாக வீடுகளில் படுப்பதற்கென்று தனி அறைகள் கிடையாது அதாவது பெட்ரூம் வசதிகள் கிடையாது நாடு ஹாலில் தான் அனைவரும் படுத்துறங்கினார்கள். ஒரு மனிதர் ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்கும் போது, அந்த இடத்தில் அவருடைய தேக உஷ்ணம் (body heat) அதிகமாக இடம்பெற்றிருக்குமாம். விலங்குகளுக்குக் கூட இதை உணரும் சக்தி நன்கு இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஒரு மனிதன் ஒரு இடத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு பின் சென்று விட்டாலும், அங்கு வரும் விலங்குகள், இங்கு ஒரு மனிதன் சிறிது நேரத்திற்கு முன்னால் தங்கிவிட்டு சென்றிருக்கின்றான் என்று தெரிந்து கொள்கின்றன. இதை விலங்குகள் வாசனை மூலம் மட்டும் அல்லாமல் அங்கிருக்கும் சில அதிர்வுகளை வைத்தும் அவை தெரிந்து கொள்கின்றனவாம். இந்த உஷ்ணத்தை ஆன்மீகத்தில் உடலின் ஒளி என்று குறிப்பிடுகின்றனர். படுக்கையில் ஒருவர் தொடர்ந்து 6 அல்லது 7 மணி நேரம் தொடர்ந்து இருப்பதால், படுக்கையிலிருந்து எழுந்த பின்னரும், அவருடைய உடலின் ஒளி அந்தப் படுக்கையில் இருக்குமாம்.

2.png

#1. படுக்கையும், போர்வையும் மடித்து வைக்காமல் இருக்கும் போது, படுக்கையை 10 பேர் மிதித்துக் கொண்டு போவார்கள். இந்த நிலையில், அதே படுக்கையில் அவர் அன்றிரவு படுப்பது, நிச்சயமாக அவருடைய ஆரோக்கியத்திற்கும், மன நலனுக்கும் நல்லது இல்லை என்கிறது ஆன்மிகம்.

#2. நீங்கள் ஒரு புதிய இடத்திற்குச் செல்கிறீர்கள் என்று வைத்துகொள்ளுங்கள். அங்கே எல்லா வசதிகளும் இருக்கின்றன. நீங்களும் களைப்பாகத்தான் இருப்பீர்கள். இருந்தாலும் அங்கிருக்கும் மெத்தையில் படுத்தால் தூக்கம் வரவேவராது.

#3. காரணம் உங்கள் ஒளி உடலுக்கு (spiritual light body) அங்கிருக்கும் ஒளி உடலின் தன்மையுடன் ஒத்து வரவில்லையென்றால் உங்கள் உடல் அங்கு சுகமாகவே இருக்காது என்பது தான். அங்கே தேவையற்ற கனவுகள் வந்து உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்க வாய்ப்புகளும் அதிகம்.

#4. ஆனால் படுக்கையைச் சுருட்டி வைத்து உபயோகிக்கும் போது, உங்கள் படுக்கையின் தன்மை மற்றவர்களால் பாதிக்கப்படாமல் இருக்கும், மேலும் படுத்தவுடனேயே உங்கள் உடல் படுக்கையில் ஒத்துப்போகும்.

#5. உடல் மனம் இரண்டுமே பாதிப்பின்றி சுகமாக இருக்கும். ஒருவர் உடுத்திய உடையை இன்னொருவர் உடுத்தக் கூடாது, ஒருவர் படுக்கையை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது என்று கூறுவதெல்லாம் இதன் அடிப்படையில்தான்.

#6. இப்போது பல வீடுகளிலும் படுக்கையறை வந்துவிட்டது. அனைவரும் கட்டிலில் கனமான மெத்தை போட்டுப் படுக்கப் பழகி வருகிறார்கள். அந்த மெத்தையையும் சுற்றி வைத்தால் நல்லது.

#Bedspread Secret - அப்படி அந்த கனமான மெத்தையைச் சுற்றி வைக்க முடியவில்லையென்றாலும் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் ஒரு துணி போட்டு மூடிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, நம் மனநிலை மற்றும் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து பாதுகாக்க முடியும் என்கிறது ஆன்மீகம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top