#Mehndi: திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மெஹந்தி போடுவது ஏன் என்று தெரியுமா?
  • 16:34PM Oct 28,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 16:34PM Oct 28,2019 Kodambakkam

இந்திய திருமணங்களில் நடத்தப்படும் பொதுவான சடங்குகளில் ஒன்று மணமகளுக்கு மருதாணி வைப்பது. வட இந்தியாவில் இதற்கென்று ஒரு தனி விழாவையே எடுப்பார்கள். தென்னிந்தியாவில் இதற்கான ஒரு தனி விழா எடுப்பதில்லை என்றாலும் பத்தாயிரம் வரை செலவு செய்து மணமகளின் கை மற்றும் கால்களில் மருதாணி வைத்து சிறப்பிப்பார்கள். இந்த மருதாணி வைக்கும் பழக்கம் பண்டைய தமிழ் நாகரீகத்திலும் இருந்து வந்துள்ளது. திருமணத்தின் போது மணமகளுக்கு என் மருதாணி வைக்கும் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

2.jpg

மருதாணி வைக்கப்படும் மணமகளின் கைகள் எவ்வளவு அதிகமாக சிவக்கிறதோ, அது அவளின் வருங்கால கணவர் மீது உள்ள அன்பைக் குறிக்கிறது என்று நம்முடைய முன்னோர்கள் கூறுகிறார்கள். ஆனால் தற்போது செயற்கையாக நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட  மருதாணிகள் “மெஹந்தி கோண்” என்ற பெயரில் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. அதனால் மருதாணியின் நிறத்தை வைத்து அன்பை எடைபோட்டால் மணமகன்கள் ஏமாந்து போக நேரிடலாம் என்கின்றனர் சிலர். அதுவே மணமகளின் கையில் மருதாணி நீண்ட நாட்கள் அழியாமல் இருந்தால், அது அவளது மாமியார் மணமகளை பாராட்டுவார் என்றும் ஒரு கருத்து இருந்து வருகிறது. மணமகளின் கையில் உள்ள மெஹந்தியின் வடிவமைப்புகள் அனைத்துமே வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களின் அடையாளமாக வரையப்படுவதாகவும் கூறப்படுகிறது. மலர்கள், பட்டாம்பூச்சிகள், பறவைகள், மணமகன் மற்றும் மணமகள் பெயர் போன்ற மெஹந்தியின் வடிவமைப்புகள் அனைத்துமே பொதுவானவை.

3.jpg

மணமகளின் உள்ளங்கையின் பின்புறம் போடும் வடிவமைப்பு அவளது வாழ்க்கையின் கவசம் மற்றும் பாதுகாப்பையும், உள்ளங்கையில் போடுவது பிரசாதத்தையும், மலர்கள், சந்தோஷம் மற்றும் இதயத்தின் அறிகுறியையும், வாழ்க்கையின் புதிய ஆரம்பத்தையும் குறிக்கிறது என்கின்றனர் நம் முன்னோர்கள். மருதாணி ஒரு சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகை என்பதால், இது அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற ஒருவித பயமான உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவுவதாகவும் கூறப்படுகிறது. ஆதலால் தான் திருமணத்தின் போது மணமகளின் கையில் மருதாணி போடப்படுகிறது, திருமணத்தினால் மணமகளுக்கு ஏற்படும் பதட்டத்தை குறைத்து, உடல் மற்றும் நரம்பின் நுனிகளை குளிர்விக்க உதவுகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top