Timeless

#Jeans Pant: அதிகமா ஜீன்ஸ் ஏன் நீல நிறத்தில் உள்ளது.? வரலாற்றை கிளறி எடுத்து கூறப்பட்ட பதில் - ஓ! இதுதான் விஷயமா?

Aug 01 2019 06:51:00 PM

இன்றைக்கு ஜீன்ஸ் பகட்டு ஆடையாக இருந்தாலும், ஒரு காலத்தில் சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சீருடையாக இருந்திருக்கிறது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் Jacob W Davis என்பவரால் சுரங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு அவர்களின் உடைகள் கூர்மயான பாறைகளில் பட்டு விரைவில் பயனற்றுப்போவதைத் தடுக்கவே ஜீன்ஸ் என்கிற டெனிம் வகையிலான துணியாலான ஆடையை அறிமுகப்படுத்தினார்.

குறைவான விலையில் ஜீன்ஸ் ஆடையை தொழிலாளர்களுக்கு விற்க விரும்பிய ஜேக்கப் குறைவான விலை கொண்ட சாயத்தை பயன்படுத்துவதன் மூலம் விலையை ஓரளவு குறைக்கலாம் என எண்ணினார். அவர் ஜீன்ஸ் தயாரித்த காலகட்டத்தில் இண்டிகோ நிறச் சாயமே மிக மலிவான விலையில் கிடைத்தது. எனவே தான் அந்த நிறச் சாயத்தை பயன்படுத்தினார். காலங்கள் மாறினாலும் இண்டிகோ நிறத்திலான ஜீனின் மோகம் மட்டும் இன்னும் மாறாமல் உள்ளது.

இதேபோல பேண்ட்-இன் பைகள் எளிதில் கிழியாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்பட்ட Rivet என்கிற பொத்தான்கள், இப்போது தேவையில்லை என்றாலும் பயன்படுத்தப்படுகின்றன என்பது முரண். இன்றைக்கும் கருப்பு நிற ஜீன்களை விட நீல நிற ஜீன்களின் விற்பனையே அதிகம். நீண்ட காலம் தாங்கும் தன்மை, அழுக்கு படிவது அவ்வளவு சீக்கிரத்தில் வெளியில் தெரியாது என்பதால், நடுத்தர வயதுடையவர்கள் விரும்பி அணியும் ஆடையாக இருந்து வருகிறது.

ஒரு பக்கம் இதன் நன்மைகள் பெரிதாக பேசப்பட்டாலும், இன்னொரு பக்கம் ஜீன்ஸ் ஆடைகள் தாயாரிக்க அதிக நீர் வீணாகி போவதாகவும், சாயம் போட பயன்படுத்தப்படும் ரசாயனத்தால் சரும பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மலிவான விலை என்ற பெயரில், ஜீன்ஸ் ஆடைகளை போலவே தோற்றமளிக்கும் ஆடைகள் சந்தைக்கு வந்துள்ளன. அவற்றில் தான் அதிகம் சாயமேற்றுதல் சார்ந்த குளறுபடிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.