#First Night: முதல் இரவு தானா? முதல் பகல் என்று வைத்துக் கொண்டால் என்ன குறைந்து போகும்? தெரிஞ்சிக்கலாமா!!!
  • 11:30AM Oct 12,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 11:30AM Oct 12,2019 Kodambakkam

தாம்பத்தியத்தில் ஈடுபடும் ஒரு தம்பதிகள் முதலில் மனதளவிலும், உடல் அளவிலும் தயாராக வேண்டியது அவசியமான ஒரு. ஆணும் பெண்ணும் இல்லற வாழ்க்கையில் செழித்து வாழ தாம்பத்தியம் ஒரு முக்கியமான ஊந்து சக்தியாக பார்க்கப்படுகின்றது. இந்த வகையான காமத்தில் பாசம், நேசம், அன்பு, மரியாதை, விட்டுகொடுக்கும் மனப்பான்மை போன்ற பல உளவியல் சார்ந்த விஷயங்கள் இருக்கிறது. இதை தவிர்த்து வாழ்க்கைத் துணையிடம் காமத்தை மட்டும் எதிர்பார்த்தால் ஒரு அளவிற்கு மேல் இனிப்பானது திகட்டி போகும் கதை தான் நம் வாழ்க்கையில் மிஞ்சும். முப்பாலில் வள்ளுவர் காமத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்ததன் காரணம் இப்போது விளங்குகிறது அல்லவா. காமத்துப்பால் அதிகாரத்தில் உள்ளவற்றை படித்து அதன்படி நடந்துக்கொண்டாலே போதும் இல்லறம் மிக சிறப்பாக இருக்கும் என்று பெரியவர்கள் கூறுகின்றனர். சரி இந்த தாம்பத்தியத்தை பகலில் செயல்படுத்தும் அன்பர்களுக்கு வள்ளுவரின் சில அறிவுரைகள் இதோ.

2.jpg

பொதுவாகவே இரவு நேரத்தில் தான் தாம்பத்தியம் வைத்துக்கொள்வார்கள். ஆனால் ஒரு சிலர் பகல் வேளையில் கூட தாம்பத்தியம் வைத்துக்கொள்வார்கள். அவ்வாறு வைத்துக்கொள்வது சரியானது தானா ? என்ற கேள்வி தற்பொழுது எழுந்துள்ளது. இடம் பொருள் எவள் இவை அனைத்தும் காமத்திற்கு நன்கு பொருந்தும். அப்படி அமைதியான நேரமும், மனமும், உடல் ஒத்துழைப்பும் சிலருக்கு பகலில் கிடைப்பதனால் தான் அவர்கள் பகலில் தாம்பத்தியத்தை மேற்கொள்கின்றனர். பொதுவாகவே பகல் நேரத்தில் தாம்பத்தியம் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது சாஸ்திர விதி.

1.jpg

தாம்பத்தியம் என பெயர் வர காரணம் என்ன தெரியுமா வாசகர்களே? பத்தியம் போல முறையாகவும், அளவாகவும் இதை செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான். பகல் நேரத்தில் தாம்பத்தியம் கூடாது என்று சாஸ்திரம் சொல்வது ஏன் என்று தெரியுமா வாசகர்களே. அதாவது பகல் நேரத்தில் நம் உடல் உறுப்புகள் அனைத்தும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்குமாம். அப்போது நமது உடலில் சூடு அதிகமாக காணப்படுமாம். இது போன்ற சமயத்தில் தாம்பத்தியம் வைத்துக் கொண்டால் உடல் பலவீனமாக ஆகிவிடும். அதுமட்டும் இல்லாமல் உயிர் அணுக்களில் வேகமும் இருக்காதாம். தாம்பத்யம் வைத்துக் கொண்ட பின், எப்படியும் உடலுக்கு ஓய்வு தேவைப்படும் அல்லவா? இவை அனைத்தும் பகல் பொழுதில் சரியாக வருமா? அதனால் தான் சாஸ்திரப்படி முதல் இரவு என்று குறிப்பிட்டு பெயர் வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top