#airplanes : விமானங்களுக்கு ஏன் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கிறார்கள் ?
  • 00:45AM Oct 15,2019 India
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 00:45AM Oct 15,2019 India

அறிவியல் உலகில் எல்லா செயல்களுக்கும் ஒரு கரணம் உண்டு அந்த வகையில் தற்போது செயல்பாட்டில் உள்ள பெரும்பாலான விமானங்கள் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும்.எதனால் விமானங்களுக்கு  வேறு வண்ணங்கள்  அடிக்காமல் வெள்ளையை அடிக்கிறார்கள் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்

flight.jpg

விமானங்களுக்கு  வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிப்பதற்கு  உண்மையில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. விமானங்களில் ஏற்படும் எண்ணெய் கசிவு, மற்றும் விரிசல் போன்று ஏதேனும் இருந்தால் அதை எளிதாக கண்டறிய வெள்ளை நிறம்தான் உதவி செய்கிறது மேலும் மிக முக்கியமான காரணமாக கூறப்படுவது வெள்ளை நிறம் விமானங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

flight 1.jpg

விமானங்கள் வெள்ளை நிறத்தை தவிற வேறு ஏதேனும் நிறத்தில் விமானங்களை பெயிண்ட் செய்தால், அது சூரிய ஒளியை அதிகமக உள்  இழுத்து   வெப்பத்தை அதிகரித்து  விடும். சூரிய கதிர்வீச்சுகளால் சேதாரம் உண்டாகும் வாய்ப்புகளையும் வெள்ளை நிறம் குறைத்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விமானங்களுக்கு வெள்ளை நிறம் அடிக்க மற்றொரு முக்கியமான காரணம் செலவும் குறைவு

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top