Highrise

4000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் தேசிய விளையாட்டு..? சரித்திரத்தை மாற்றிய ஆதாரம்..!

Mar 04 2019 02:00:00 PM

your image

1875 ஆம் ஆண்டு உலகின் முதலாவது உள்ளரங்க பனி ஹாக்கிப் போட்டி, கனடாவின் கியூபெக் நகரில் விளையாடப்பட்டது. ஹாக்கியின் வரலாறு என்பது மிகமிகப் பழைமையானதாக உள்ளது.

அனேகமாக, உலகின் அனைத்து நாகரிகங்களுமே, நுனியில் வளைந்த குச்சியையும், பந்து போன்ற பொருட்களையும் பயன்படுத்தி விளையாடியிருக்கின்றன.

எகிப்தில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்ட ஓவியங்களில் இத்தகைய விளையாட்டு காணப்படுகிறது. தற்போது ஹர்லிங் என்ற பெயரில் விளையாடப்படும், ஹாக்கியை ஒத்த விளையாட்டு, அயர்லாந்தில் கி.மு.1272இலும், கிரேக்கத்தில் கி.மு.600களிலும் விளையாடப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

தற்காலத்திய ஹாக்கியை ஒத்த, பெய்க்கோவ் என்னும் விளையாட்டை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மங்கோலியாவின் தாவுர் மக்கள் விளையாடியுள்ளனர். ஹாக்கி என்ற சொல்லுக்கான வரலாறு தெரியவில்லை.

இடையர்களின் குச்சியைக் குறிக்கும் நடுக்கால பிரெஞ்சுச் சொல்லான ஹாக்கெட் என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்றும், வளைந்த என்பதைக் குறிக்க ஆங்கிலத்தில் ஹூக்ட் என்ற சொல் பயன்படுத்தப்படுவதால், ஹூக்கி என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்தியா முதலான நாடுகளில் விளையாடப்படும் பீல்ட் ஹாக்கி என்று வகைப்படுத்தப்படுவதே பொதுவாக ஹாக்கி என்று அழைக்கப்படுகிறது.

ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் விளையாடப்படும் இதனை 126 நாடுகள் கொண்ட பன்னாட்டு ஹாக்கி கூட்டமைப்பு கட்டுப்படுத்துகிறது.

இதைத் தவிர, பனி ஹாக்கி, பேண்டி, பனிச்சறுக்கு ஹாக்கி, ரோலர் ஹாக்கி, ஸ்ட்ரீட் ஹாக்கி ஆகிய பரவலாக விளையாடப்படும் வகைகளோடு, இன்னும் ஏராளமான ஹாக்கி வகைகள் உலகில் விளையாடப்படுகின்றன. போலோ விளையாட்டுக்கூட, குதிரை மீதமர்ந்து விளையாடும் ஹாக்கி என்று குறிப்பிடப்படுவதுண்டு.

நாட்லெய்க்கர் என்னும் பனி ஹாக்கியைப் போன்ற ஒரு விளையாட்டை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஸ்காண்டினேவிய மக்கள் விளையாடியுள்ளனர். 17ஆம் நூற்றாண்டில், இங்கிலாந்தில் பனியால் உறைந்த பகுதிகளிலும் ஹாக்கி விளையாடிய ஆங்கிலேயர்கள், கனடாவுக்குச் சென்றபோது, அவற்றை உடன் எடுத்துச் சென்றதால், அங்கு பனி ஹாக்கி உருவானது.