#WhatsApp: இனி அதுக்கெல்லாம் போவீங்கா.? எல்லாமே இங்க இருக்கு : வசதியா கொடுத்த WhatsApp.!
  • 17:20PM Jul 16,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 17:20PM Jul 16,2019 India

முன்ன எல்லாம் தான், போட்டோ எடிட் பண்ண ஒரு ஆப், வீடியோ கட் பண்ண ஒரு ஆப், ஃபைல் அனுப்ப ஒரு ஆப்-ன்னு சொல்லி போன் மெமரியே ஃபுல் ஆகுற அளவுக்கு ஆப் டவுன்லோட் பண்ணி தள்ளிருவாங்க. இப்போ சிம்பிளா ஒரே ஆப்ல photo edit, video edit, mp3 cut-ன்னு சொல்லி எல்லா வசதியும் வந்துருது. உதாரணத்துக்கு whatsapp எடுத்துக்குவோம் நாம இருக்க location share பண்ண முடியும். வீடியோ, ஆடியோ, போட்டோ, டாகுமென்ட் அனுப்ப முடியும். காண்டாக்ட் அனுப்ப முடியும். பொழுதுபோக்கு டூல் கூடவே, professional tools-ம் கலந்து இருக்க ஆப் தான் whatsapp. முடிஞ்ச வரைக்கும் யூசர்ஸ் வெளிய போகாம whatsapp-க்கு உள்ளயே சுத்த வைக்க அடுத்த முயற்சி எடுத்துருக்கு whatsapp நிறுவனம். போட்டோ எடிட் பண்ண வேற ஆப் யூஸ் பண்ணவங்க எல்லாரையும் இனி வாட்ஸ்ஆப்லயே esay-யா போட்டோ எடிட் பண்ண வைக்க quick photo edit tool கொண்டு வரப்போறாங்க.

க்விக் எடிட் மீடியா ஷார்ட்கட்:

இந்த புதிய அம்சம் Quick media shortcut என்ற பெயரில் உருவாகுது. இப்போதைக்கு சோதனை நடந்துகிட்டு இருக்கு. விரைவில் பயன்பாட்டுக்கு வர போகுது. இதனை உறுதிப்படுத்தும் screenshot வெளியாகி இருக்கு. அதுல whatsapp உள்ள போட்டோ திறக்கப்பட்டதும் edit button முன்னாடி வருது.  அத க்ளிக் செஞ்சா டெக்ஸ்ட், டூடுள் அல்லது தலைப்பை சேர்க்கும் வசதி வருது. இந்த புதிய அம்சத்தின் மூலம் edit செய்யப்படும் போட்டோ ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படுவதில்லை. இதனால் ஸ்மார்ட்போன் மெமரியும் பாதிக்கப்படாது.

#WhatsApp: இந்த மாதிரி ஏற்கனவே டெலிகிராம்ல இருந்தாலும், WhatsApp அறிமுகப்படுத்தினா அது வேற லெவல்ல இருக்கும். அதனால இதுக்கு  எதிர்பார்ப்பு கூடி இருக்கு.

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top