#Don’t stop: உடலுறவு கொள்வதை முற்றிலுமாக நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?
  • 05:03AM Jun 27,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 05:03AM Jun 27,2019 Kodambakkam

ஒவ்வொரு அணுக்கும் பெண்ணுக்கும் உடலுறவு பற்றி தெரிந்து கொள்ள அதிகப்படியான ஆவல் இருக்கத்தான் செய்கிறது. உடலுறவு என்பது பேரின்பத்தை மட்டும் தரவல்லது அல்லவே இன்னும் உடல் சார்ந்த, மனம் சார்ந்த பல நன்மைகளை நமக்கு கொடுக்கிறது. இந்த காலத்தில் இளம் தம்பதிகளுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது எது என்று பார்க்கையில் உடலுறவு கொள்வதில் பிரச்சனை இருப்பதும், பாலியல் வாழ்க்கை சந்தோஷமாக இல்லாமல் இருப்பதையும் காரணமாக கூறலாம்.

12.jpg

அதே சமயம் இளம் தம்பதிகளுக்குள் நெருக்கத்தையும், புரிதலையும், ஒரு அன்னியோன்னியத்தையும் தருவது நிம்மதியான தாம்பத்தியம் தான் என்கின்றனர் மருத்துவர்கள். திருமண வாழ்க்கையில் பலர் முதல் குழந்தை பிறந்ததற்கு பிறகு முற்றிலுமாக உடலுறவு கொள்வதை நிறுத்திக் கொள்கின்றனர். இப்படி உடலுறவு கொள்வதை ஒருவர் முற்றிலுமாக நிறுத்திக் கொள்ளும் பொழுது அவருக்குள் அது பல மாற்றங்களை கொடுக்கிறது.

11.png

உடலுறவு கொள்வதை நிறுத்தும் பொழுது உடலில் இயங்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிப்படையும். இதனால் அடிக்கடி தும்மல், சளி மற்றம் காய்ச்சலால் அதிகம் அவதிப்படுவார்கள். ஆகவே இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமானால். அடிக்கடி உடலுறவு கொள்வதில் ஈடுபடுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். பல மாதங்களாக உடலுறவு கொள்ளாமல் இருந்தால் மன அழுத்தத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பித்துவிடும். பொதுவாக உடலுறவு கொள்ளும் பொழுது  நமது மனதை அமைதிப்படுத்தும், சந்தோஷப்படுத்தும் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கிறது. ஆனால் இதை முற்றிலும் தவிர்க்கும் பொழுது அடிகடி மன நிம்மதி குறைவதுடன் அடிகடி கணவன் மனைவிக்குள் சண்டை அதிகரிக்கும்.

14.jpg

பல மாதங்கள் உடலுறவு கொள்ளாமல் இருக்கும் பொழுது பாலியல் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் நேரிடும். தம்பதிகளில் ஒருவர் உடலுறவை முற்றிலுமாக தவிர்க்கும் பட்சத்தில் மற்றொருவர் வேறொருவரால் ஈர்க்கப்பட அதிக வாய்புகள் இருக்கிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அதிகப்படியான சந்தேகங்கள், பிரச்சனைகள் மற்றும் சண்டைகள் வர வாய்புகள் அதிகம். ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை என்றுமே இன்றியமையாதது என்று சித்தர்கள் சொல்வதற்கான காரணம் இதுதான்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top