Lushgreen

#filter coffee: ஃபுல் ஸ்ட்ராங்! கடையில் கிடைக்கும் பில்டர் காபியின் சுவை வீட்டில் வர என்ன செய்யலாம்? ஒன்னு விடாம பாருங்க!

Nov 25 2019 12:50:00 PM

கடையில் கிடைக்கும் பில்டர் காபியின் சுவை, வீட்டு பில்டர் காபியில் ஏன் வருவதில்லை என்ற சந்தேகம் பலருக்கும் எழும். வெறுமனே வழக்கமாக காபி போடும் முறையில் முயற்சித்தால், அந்த சுவை வராது. இதற்கென்று தனியாக ஒரு வரைமுறையே இருக்கு. அதை தான் சீக்ரெட்டாக வைத்துள்ளனர் பெரிய பெரிய காபி கடைகள். அது எப்படி என்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.

#1. இதற்கு முதல் கண்டிசன் பாலில் தண்ணீர் அறவே கலக்க கூடாது.

#2. காபி குழம்பு மாதிரி வர வேண்டும் என்றால் எருமைப்பாலில் தான் காபி போட வேண்டும்.

#3. கடைகளில் கிடைக்கும் காபி பொடி பாக்கெட்கள் சுத்தமாக வேலைக்கு ஆகவே ஆகாது.

#4. காபி கொட்டைகளை நாமே வாங்கி, அதனை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். கூடவே அரைத்த காஃபி பொடியில் சிக்கரி கலக்க வேண்டும்.

#5. நல்ல தரமான பித்தளை பில்டர் பாத்திரம் தான் காபி தயாரிக்க தேவையானவற்றில் முக்கியமான ஒன்று.

#6. பில்டரில் காபி பொடி போட்டு, அதனுடன் சூடான தண்ணீர் ஊற்றி மூடி வைத்துவிட வேண்டும்.

#7. சுடு தண்ணீர் ஊற்றி 2 அல்லது 3 நிமிடங்கள் கழித்து கீழே உள்ள பகுதியில், நல்லா திக்கான டிகாஷன் இறங்கி இருக்கும்.

#8. அதனை சூடான பாலில் தேவையான அளவுக்கு கலந்து சர்க்கரை சேர்த்து நுரை வரும் வரையில் ஆற்ற வேண்டும். அவ்வளவு தான் கடையில் கிடைப்பது போல சூடான பில்டர் காபி ரெடி.

#filter coffee: காஃபி கொட்டைகளை பெரிய அங்காடிகளில் வாங்கலாம். நிறைய வகைகள் உள்ளன. ரோபோஸ்டா என்று ஒரு வகை உண்டு. இது காஃபின் அதிகம் உள்ள வகை. அதிகமாக கசக்கும். Instant coffee காபி பொடிகள் 90 சதவீதம் இந்த வகையே‌. | Boil egg: விஷயம் கத்தி மேல் நடக்கற மாதிரி - முட்டையை அவிக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து கொள்வது எதற்காக தெரியுமா?