#Carbon Nanotubes: உலக நாடுகள் முக்கி முக்கி கண்டுபிடித்த ஒன்றை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்ட தமிழன் - மிரளும் ஆய்வாளர்கள்!
  • 13:21PM Oct 05,2019 Kodumanal
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 13:21PM Oct 05,2019 Kodumanal

Carbon Nanotubes துறையில் முனைவர் பட்டம் பெற்ற விஜய் அசோகன் மூலமாக தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவியலிலும் சிறந்து விளங்கினர் என்பதை அறிய முடிகிறது. இது குறித்து பேசும் விஜய் அசோகன் Carbon Nanotubes என்னும் பொருளைப் பற்றின ஆய்வில் தான் நான் முனைவர் பட்டம் பெற்றேன். சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தபொழுது, தமிழனின் சங்க கால எஃகு அல்லது Steel வகை WOOTZ STEELற்கும் என் துறை ஆய்விற்கும் தொடர்பு இருப்பதாக நண்பர் சார்ல்ஸ் தெரிவித்த பொழுது வியப்பாக இருந்தது.

பிறகு அவர் அனுப்பிய ஆய்வுக்கட்டுரைகள் வழியே தகவல்களை தேடிக்கொண்டிருந்தபொழுதுதான், சங்க காலம் முன்பே தமிழனின் உருக்காலைகளில் தயாரிக்கப்பட்ட WOOTZ STEEL எனப்படும் உருக்கு உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்பட்டதை அறிந்து வியந்து போனேன். இத்தகைய WOOTZ STEEL கொடுமணலில் உருவாகி இருக்கலாம். 2010ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கபெறும் அகழ்வாய்வு முடிவுகள் கொடுமணல் பகுதிகளில் இரும்பு உருக்காலை இருந்ததும் அது சங்க காலத்தின் முன் வயதை தொடுவதும் நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல, கொடுமணல், சேரனின் தலைநகர் கரூருக்கும் சேரனின் துறைமுகம் முசிறிக்கும் இடையிலான வழித்தடங்களில் வருகிறது என்பதையும் நினைவில் கொள்க.

அப்படியாக தமிழனின் நிலப்பரப்போடு தொடர்புடைய உருக்கு கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு வாள் குறித்த ஆய்வு 2006இல் நிகழ்ந்தது. சிரியாவின் டமஸ்கஸ் நகரில் கண்டு எடுக்கப்பட்ட அவ்வாளில் இருந்து ஆய்வினை மேற்கொண்ட பொருளியியல் அறிவியல் ஆய்வுத் துறையினர் அந்த உருக்கினுள் CARBON NANOTUBES இருப்பதை பகுத்தாய்ந்து உள்ளனர். ஐரோப்பிய மண்ணில் இருக்கும் தாதுவில் உருவான இரும்பு கொண்டு செய்த வாளிலோ, அல்லது உருக்கிலோ இத்தகைய CARBON NANOTUBES உருவாகவில்லை. தமிழர் நிலத்தில் கிடைக்கப்பெற்ற இரும்பு தாது கொண்டு உருக்கு செய்யப்படும்பொழுதே இத்தகைய CARBON NANOTUBES கிடைக்கிறது. அதனுள் இருக்கும் சூட்சமம் முழுதாக தெரியவில்லை..அல்லது அதன் பின் தொடர்ந்த ஆய்வு முடிவுகள் என் பார்வைக்கும் கிட்டவில்லை என சொல்லலாம்.

உருக்கில் இருக்கும் இரும்பு உள்ளிட்ட Transition metal இடைமாறு உலோகம் கரிமப்பொருட்களோடு வினைப்புரியும்பொழுது,CARBON NANOTUBES கிடைக்கும். இதனை, எலெக்ட்ரான் நுண்ணோக்கி வழியாகவே பகுத்துணர முடியும். எனது முனைவர் பட்ட ஆய்வினை நிறைவு செய்தபின் தற்பொழுது நுண்ணோக்கித் துறையில் ஆய்வு புரிகிறேன்...உலகமெல்லாம் நான் பறந்து செல்ல இத்துறைகளின் அறிவே காரணம். அடடா!, தமிழனின் வரலாற்றுத் தொன்மம் என்னுள் இப்படி இறங்கி வேலை செய்கிறதே என்று பெரிமிதத்துடன் கூறியிருக்கிறார். | sushruta: மருத்துவர்கள் வெள்ளைநிற ஆடை அணிவதற்கு பின் உள்ள யூகிக்க முடியாத காரணமும் பண்டையகால மருத்துவமும்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top