#Vijayakanth இதுயென்ன கேப்டனுக்கு வந்த சோதனை! 5 கோடி கடனுக்கு 100 கோடி சொத்து ஏலத்துக்கு வருது! பிரேமலதா என்ன சொல்றாங்க?
  • 17:18PM Jun 21,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:18PM Jun 21,2019 Chennai

இன்று வெளியான நாளிதழ் செய்தியில் வாங்கிய வங்கி கடனை செலுத்தமுடியாத காரணத்தால் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரியை ஏலத்தில் விடப்போவதாக இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்தி தேமுதிக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் வங்கியில் செலுத்தாமல் இருக்கும் 5,52,73,825 கோடி கடன் பாக்கிக்காகச் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீடு மற்றும் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் கல்லூரி ஆகியவற்றை ஏலத்தில் விடவுள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதில் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் கல்லூரிக்கு குறைந்தபட்ச கேட்பு விலை 92,05,05,505 கோடி ருபாயாகவும், சாலிக்ராமத்தின் காவேரி தெருவில் உள்ள வீட்டிற்குக் குறைந்தபட்ச கேட்பு விலை 4,25,84,849 கோடி ருபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வேதவள்ளி தெருவில் உள்ள வீட்டிற்குக் குறைந்தபட்ச கேட்பு விலை 3 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் பெயரில் வாங்கிய கடன் 5 கோடி கடனுக்கு 100 கோடி ரூபாய் சொத்துக்களை ஏலம் விடுவது என்ன காரணம் என்று தெரியவில்லை.

இந்த விஷயம் விஜயகாந்துக்குத் தெரியுமா அல்லது அவரது காதுக்குக் கொண்டு செல்லாமல் விட்டுவிட்டார்களா என்று கட்சி தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 5 கோடி என்பது விஜயகாந்த் எளிதாகக் கட்டக்கூடிய கடன், என்னினும் இப்படி ஏலம் வரைவர விட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகக் கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்துப் பிரேமலதா கூறுகையில், நேர்மையானவர்களுக்குச் சோதனை வரும், ஆனால் கடவுள் கைவிடமாட்டார், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் கடனில் தான் உள்ளன. கடன் பிரச்னையைச் சட்டப்பூர்வமாக எதிர்கொண்டு கல்லூரியை தொடர்ந்து நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top