#Travel Tips: ஆன்லைனில் ஃபோட்டோஷாப்!! நேரில் சென்றால் படு மொக்கையான ஹோட்டல் ரூம்!!! என்ன செய்வது?
  • 12:19PM Oct 30,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 12:19PM Oct 30,2019 Kodambakkam

இப்போது இருக்கும் இணைய வசதியில் கையில் ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தால் போதுமானது, வீட்டில் இருந்த படியே உங்களால் ஒரு பக்காவான ட்ரிப்பை பிளான் செய்து, தேவையான இடத்தில் தேவையான சவுகரியங்களை செய்து கொள்ள முடியும். குறிப்பிட்ட சுற்றுலாத்தலத்திற்கு சென்று தங்கி சுற்றிப்பார்க்க வேண்டும் என்றால் நமக்கு வசதியான ஒரு ஹோட்டல் ரூமை முன்கூட்டியே புக் செய்து கொள்ள வேண்டும். பெரும்பாலான ஹோட்டல்கள் தங்களிடம் இருக்கும் வசதியை ஆன்லைனில் அல்லது அவர்களது சொந்த இணையதளத்தில் வகைவகையாக வர்ணித்து பல பதிவுகளை போட்டிருப்பார்கள். நாம் தான் நமக்கு தேவையான அறையை தேர்ந்தெடுத்து ரிசர்வ் செய்து கொள்ள வேண்டும். ஆனால் சில ஹோட்டல்கள் இந்த சவுகரியத்தை சாதகமாக்கிக்கொண்டு சில கொக்கு மாக்கான வேலைகளை செய்து கஸ்டமரை ஏமாற்றுகின்றனர். அவர்களது இணையத்தில் ஹோட்டல் ரூம் பற்றிய விவரங்களில் கஸ்டமரை கவர இஷ்டத்திற்கு அள்ளி விட்டிருப்பார்கள். அதை நம்பி நாமும் ஹோட்டலுக்கு சென்று சொன்ன தோகையை கட்டிவிட்டு டிராவல் செய்த களைப்பில் ரூமிற்கு சென்று விடுவோம். ரூமிற்கு சென்று பார்த்தால் தான் தெரியும் அது ஒரு மொக்கையான ரூம் என்று. இணையத்தில் அவர்கள் வர்ணித்து எல்லாம் புருடா என்று. வேறு வழியில்லாமல் நாமும் அந்த அசவுகரியத்தை சலித்துக்கொண்டு தங்குவும். இப்படியான தவறுகளை தவிர்க்க என்னவெல்லாம் நாம் செய்ய வேண்டும் என்பது பற்றி தான் இந்த பதிவில் உங்களுக்கு நான் சொல்லப் போகின்றேன்.

44.jpg

#1. ஹோட்டல் ரூமை இணையத்தில் முன் பதிவு செய்யும் போது “Any additional or special requests” என்று ஒரு பகுதி இருக்கும். அதில் தெளிவாக room எந்த floor-ரில் எந்த பக்கம் இருக்க வேண்டும், எந்த மாதிரியான வசதிகளை நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள் போன்ற எல்லா எதிர்பார்ப்புகளையும் எழுதிவிடுங்கள். பின்னால் பிரச்சனை ஆகும் தருணத்தில் அதை ஹோட்டல் லாபியில் வைத்து சத்தமாக படித்துக் காட்ட உதவும்.

#2. நீங்கள் கேட்டபடி வசதிகள் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டு உங்களுக்கான ரூமின் முன் வாடகையையும் ஆன்லைனில் வாங்கிகொண்டு. நேரில் உங்களை ஏமாற்றினால் தைரியமாக ஹோட்டலின் லாபியில் வைத்துகொண்டு ஒரு எகுரு எகுருங்கள், நீங்கள் நினைத்ததை விட சூப்பரான ரூம் கிடைக்கும்.

#3. ஹோட்டலுக்கு சென்றது check-in செய்யும் போது பெட்டி படுக்கையுடன் ரூமுக்கு விரைந்திட கூடாது. “I want to look before check-in” என்று உடன் வந்தவர் எல்லோரையும் அமர வைத்துவிட்டு, நீங்கள் சென்று ரூமை மேற்பார்வையிடுங்கள், பார்த்துவிட்ட பிறகு check-in செய்யுங்கள்.

#4. இரவு நேரங்களை சாதகமாக்கிக்கொண்டு மொக்கை ரூமை நமது தலையில் கட்ட பார்ப்பார்கள். மேனேஜ்மெண்ட்டிடம் பேச வேண்டும் என்று கூறி விட்டு விளாசுங்கள் வேறு வழியில்லாமல் நல்ல ரூம் கொடுப்பது அவர்களது கடமையாகிவிடும்.

#5. முடிந்தால் வழக்கமாக travel blogs, trip advisor-களில் review எழுதி star reviewer என்ற பட்டம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். I am a star travel reviewer, travel blogger என்று சொன்னாலே போதும் உங்கள் கால்களில் விழுந்து நல்ல ரூம் கொடுப்பார்கள்.

#Travel Tips - இந்த டிப்ஸ்கள் கண்டிப்பாக கை கொடுக்கும். பல தடவை எனக்கு இந்த டிப்ஸ்கள் கை கொடுத்துள்ளன. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top