உங்களுக்கு US விசா வேணுமா..? அப்போ சமூக வலைத்தளங்களில் கொஞ்சம் அடக்கி வாசிங்க..!
  • 10:37AM Jun 03,2019 Chennai
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 10:37AM Jun 03,2019 Chennai

உலகம் முழுவதும் வெளிநாடு சென்று படிக்க,வேலை செய்ய விரும்புபவர்களின் விருப்ப நாடக இருக்கிறது அமெரிக்கா.அவர்களும் எண்ணிக்கையைக் குறைக்க விசா வழங்குவதில் பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.இந்நிலையில் இனி அமெரிக்கா விசா வேண்டுமென்றால் சமூகவலைத்தள விவரங்களை அளிக்க வேண்டும் எனப் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனி US விசா பெற சமூக வலை தள விவரங்ககளை அளிக்க வேண்டும்!

ஆண்டுத் தொடரும் 1.47 கோடி மக்களுக்கு விசா வழங்கி வருகிறது அமெரிக்கா.இதில் இந்தியாவிலில் இருந்து 8.72 லட்சம் பேருக்கு அமெரிக்க விசா வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் விசா பார்ம்களில் டி 160 மற்றும் டி260 ஆகியவற்றில் புதிய விதிமுறைகளைச் சேர்த்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா விசா பெற புதிய நடைமுறை சமூகவலைத்தள விவரங்களை அளிக்க வேண்டும்

இந்தப் படிவங்களின் கீழ் விண்ணப்பதாரர்கள் தங்களின் Facebook,Flickr,Instagram,Youtube உட்பட அணைத்து சமூக வலை தளப் பெயர்கள் மற்றும் பதிவுகள் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் கடந்த 5 ஆண்டுகளில் அவர்கள் சமூசாக வலைத்தளங்களில் பயன்படுத்தியது குறித்துக் கேள்விகள் கேட்கப்படும்.கூறும் பதில் தூதரக அதிகாரிகளுக்குத் திருப்திகரமாக இல்லை எனில் அவர்களுக்கு விசா விண்ணப்பங்களை நிராகரிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.இந்த விதிமுறை மாணவர்கள்,பயணிகள் உட்பட அனைவருக்குமே பொருந்தும்.

Image result for american visa

அமெரிக்காவின் இந்தப் புதிய விடுமுறைக்குப் பல நாடுகள் தங்களின் எதிரிபுகளைத் தெரிவித்துள்ளது.பயணிகள்,வேளைக்கு வருபவர்களுக்குக் கூட இந்த விதிமுறைகள் இருக்கட்டும் மாணவர்களுக்காவது நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என்று பலர் கேட்டுவருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top