#Cricketers : தன் பாலின சேர்க்கை திருமணம் செய்து கொண்ட இரு கிரிக்கெட் பிரபலங்கள் - சோஷியல் மீடியாவில் வெளியான புகைப்படம்!
  • 11:01AM Apr 20,2019 Australia
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 11:01AM Apr 20,2019 Australia

தன் பாலின சேர்க்கை மனித வரலாறு தொடங்கியதில் இருந்தே தன் தொடர்ச்சியைக் கொண்டிருந்தாலும் கூட, இப்போதைய சமூகங்களில் வெறுப்புக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இன்னும் பல நாடுகளில் தன் பாலின சேர்க்கை அவமானமாக, சட்ட விரோதமானதாக பார்க்கப்படுகிறது. இந்த பாகுபாடு 1960 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஸ்ரோன்வோல் கலவரங்களைத் தொடர்ந்து பொது சமூகத்தினர் மத்தியிலும் பொதுச் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. சமீப காலமாக பல நாடுகள் தன் பாலின சேர்க்கையைச் சட்டபூர்வமானதாக அங்கீகரித்து சட்டம் இயற்றி உள்ளது.

தன் பாலின சேர்க்கையில் ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் உடல் ரீதியாக உறவு கொள்வதை ஆங்கிலத்தில் 'கே' என்கிறார்கள். அதுபோல ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் உடல் ரீதியாக உறவு கொள்வதை லெஸ்பியன் என்கிறார்கள். இதை தான் தமிழில் மகிழ்வன், மகிழினி என்று சுட்டி காண்பிக்கிறார்கள். இந்த தன் பாலின சேர்க்கையை விரும்பும் குணம் உடையவர்கள் சில நேரங்களில் இரு பாலின சேர்க்கையை விரும்புபவராகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்திய உச்சநீதிமன்றமும் கடந்த 2018 ஆம் ஆண்டு தன் பாலின சேர்க்கையை ஆதரித்து தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இரு கிரிக்கெட் வீராங்கனைகள் தன் பாலின திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை ஹாலெ ஜென்சன், நியூசிலாந்து அணிக்காக இதுவரையில் 8 ஒரு நாள் போட்டிகளிலும், பல T20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். ஜென்சனுக்கு 26 வயதாகும் நிலையில் தன் பாலின சேர்க்கை மீது விருப்பம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு ஆஸ்திரேலியா உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் 23 வயதான நிகோலா ஹன்கோக்குடன்  நெருங்கி பழகி வந்தார்.

தற்போது அவர்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டு முறைப்படி வாழ்க்கை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளனர். திருமணத்தில் தாங்கள் எடுத்த புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். பெண்கள் கிரிக்கெட்டை பொறுத்த வரையில் கடந்த 3 ஆண்டுகளில் இதே போல திருமணம் செய்து கொண்ட 3 ஆவது தன் பாலின சேர்க்கை தம்பதியினராக இவர்கள் இடம்பிடித்துள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top