#Adventurous Trip: இந்தியாவின் சிறந்த 5 சாகச சுற்றுலாத்தளங்கள்!!!
  • 18:55PM Oct 12,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 18:55PM Oct 12,2019 Kodambakkam

நாம் ஒவ்வொரு முறை சுற்றுலா செல்லும் போதும் ஏதேனும் வித்தியாசமாக முயற்சிக்க ஆசைப்படுவோம். பல முறை நண்பர்களுடன் சில அறிய இடங்களுக்கு செல்லும் பொழுது சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாம் விரும்பிய சில சாகசம் மிக்க விஷயங்களை செய்ய முடியாமல் போய்விடும். அடுத்த முறை பார்த்துக்கொள்வோம்! என்று அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம். அப்படி நீங்கள் மிஸ் செய்த அந்த சாகச விஷயங்களை ஒட்டுமொத்தமாக அனுபவித்துவிட இந்தியாவின் இந்த ஐந்து சாகச சுற்றுலாவை மேற்கொள்ளுங்கள்.

#1. ட்ரக்கிங் போகும் சுற்றுலா வாசிகளுக்கு உத்தரகாண்ட் ஒரு சொர்கலோகம் என்றே கூறலாம். பணி மலைகளுக்கு நடுவே, அந்த மலைக்குன்றை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு மணித்துளிகளும் பல சுவாரஸ்யங்கள் நிறைந்தவையாக இருக்கும். இந்த ட்ரக்கிங்கை ஆங்கிலத்தில் “walking with death” என்று அழைக்கின்றனர். காரணம் இந்த ட்ரக்கிங்கில் பயணிக்கும் பொழுது பல மனித எழும்பு கூடுகளை நம்மால் காணமுடியுமாம்.

3.png

#2. இதே உத்தரகாண்ட்டில் ரிஷிகேஷ் வரை சென்றால் “பன்ஜி ஜம்பிங்” என்ற ஒரு சாகச விளையாட்டு இருக்கின்றது. 83 அடி உயரத்தில் ரோப் கயிற்றில் நம்மை கட்டி அந்தரத்தில் தொங்கவிட்டு விடுவார்கள். அந்த ரோப் கயிறானது ஸ்ப்ரிங்கை போல நம்மை மேலும் கீழும் அந்தரத்தில் தூக்கிப்போடுமாம். இந்த சாகசத்தை அனுபவிக்க ஒருவருடத்திற்கு ஒரு லட்ச சுற்றுலா பயணிகள் வருகின்றார்களாம்.

2.jpg

#3. இருசக்கர வாகனத்தில் ஒரு சாக சுற்றுலாவை மேற்கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு சிம்லாவிலிருந்து லடாக் வரை நீளும் ஹைவே ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். சில மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் இந்த பைக் ட்ரிப்பை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாக சுற்றுலா பல சோதனைகளை கொடுத்து நமது பொறுமையை சோதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

4.jpg

#4. பசுமையான காடுகளுக்கு நடுவில் இருக்கும் நீர்வீழ்ச்சி. அந்த நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் ஆரம்பமாகும் ஓர் பிரம்மாண்ட குகை. சொல்லும்போதே ஆர்வம் அதிகமாகின்றதா. அந்த குகைக்குள் ஓர் சாகச சுற்றுலாவை மேற்கொண்டால் எப்படிஇருக்கும். அப்படிப்பட்டது தான் மேகாலயா குகை சுற்றுலாத்தளம்.

6.jpg

#5. நடுக்கடலில் முந்நூறு அடி உயரத்தில் பாராஷூட்டில் பறந்தபடி ஒரு பயணம். மிகவும் த்ரில்லான இந்த பயணத்தை மேற்கொள்ள நீங்கள் போக வேண்டியது கேரளாவில் உள்ள பாயம்பாலம் எனும் கடற்கரைக்குத் தான். இத்தனை அடி உயரத்தில் இருந்து கடலை பார்த்துக்கொண்டு பயணிப்பது ஒரு சாகசப் பயணம் தானே.

5.jpg

#Adventurous Trip – இந்த ஐந்து இடங்களுக்கு தனியாகவும் செல்லலாம், நண்பர்களுடனும் செல்லலாம். தேவையான கருவிகள் கைவசம் இருப்பது நல்லது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top