Lushgreen

போலீசாக நடிக்கவே நேந்து விடப்பட்ட விஜயகாந்த்! இன்னைக்கு ஏன் இந்த அளவுக்கு தூக்கிவெச்சு கொண்டாடுறாங்க தெரியுமா? இந்த 10 படங்களைப்பார்த்தால் உங்களுக்கே புரியும்!

Oct 25 2021 12:26:00 PM

விஜயகாந்த் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் லிஸ்ட்டில் வந்து விடும். தேசப்பற்றுமிக்க வசனங்களையும், நாட்டுப்பற்று உணர்வையும் வளர்ந்த படங்களின் பட்டியலில் அவருடைய படங்களை கட்டாயம் பார்க்க முடியும். மற்ற நடிகர்கள் போலீஸ் வேடத்தில் நடித்த படங்கள் எத்தனை என்று கேட்டால், விரல்விட்டு எண்ணிச் சொல்லிவிடலாம். யாருகிட்டயாவது விஜயகாந்த் நடித்த போலீஸ் படங்களின் பட்டியலை கேட்டுப்பாருங்க. நியாபகம் வைத்துக்கொள்ளவே சிரமப்படுவாங்க. மனுஷன் 20க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். வேறு எந்த நடிகரும் இந்த அளவுக்கு காவல்துறையோடு அட்டாச்சாகி போனது கிடையாது. அந்தப்பெருமை கேப்டன் ஒருவருக்கு மட்டும் தான் இருக்கு. இன்னைக்கு வேண்டுமானால் உடல் நிலை காரணத்தால், அவர் குரல் உளறுவது போலத்தெரியலாம். ஒரு காலத்தில் சிம்மக்குரலால், தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமைகள் பட்டியலில் விஜயகாந்துக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில் விஜயகாந்த் போலீஸ் வேடத்தில் நடித்து பிரபலமான சில படங்களின் பட்டியலை அடுத்துப் பார்க்கலாம்.

1. ஊமைவிழிகள்

viayakanth police movie

விஜயகாந்த், கார்த்தி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்த படம். அந்தக்காலத்திலேயே வாரக்கணக்கில் ஓடிய மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுத்தது.

2. மாநகர காவல்

viayakanth police movie

விஜயகாந்த் நடித்த படங்களில் பெரிய அளவிலான திருப்புமுனையை ஏற்படுத்திக்கொண்டுத்த படம் இது. இதில் ஸ்டைலான போலீஸ் வேடத்தில் கலக்கியிருப்பார்.

4. தர்மம் வெல்லும்

viayakanth police movie

இந்தப்படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இதிலும் சவாலான போலீஸ் வேடத்தை ஏற்று நடித்து, அசத்தியிருப்பார்.

5. கேப்டன் பிரபாகரன்

viayakanth police movie

வீரப்பன் பற்றின கதையை மையமாக கொண்டு உருவான படம். இதில் மன்சூர் அலிகான் வில்லனா நடித்திருப்பார். சர்ச்சைகள் பல இருந்தும், மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் இது.

6. வீரம் விளைச்ச மண்ணு

viayakanth police movie

இதிலும் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். முன்னணி நடிகைகளான குஷ்புவும், ரோஜாவும் ஹீரோயின்களாக நடிச்சிருப்பாங்க.

7. சேதுபதி IPS

viayakanth police movie

இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிகப்பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டிருக்கும். சண்டைக்காட்சிகளுக்காகவே பல வாரங்களை கடந்து ஓடியது.

8. தாய்மொழி

viayakanth police movie

இந்தப்படத்தில் விஜயகாந்த் மற்றும் சரத்குமார் ரெண்டு பேருமே நடிச்சிருப்பாங்க. இடையிடையில் வந்து போனாலும், கெத்தான போலீஸ் ஆபீசரா விஜயகாந்த் நடிச்சிருப்பாரு.

9. சத்திரியன்

viayakanth police movie

விஜயகாந்தின் பெரிய அளவிலான வெற்றிக்கு இந்தப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இது போல இன்னும் பல படங்கள் இருக்கு. இதில் விடுபட்டவை ஏதேனும் கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்க. அவை குறித்த சுவாரஸ்யமான தகவலையும் பார்க்கலாம்.