#Three fruits: அந்த பழக்கத்த விட்டாலே கை, கால் எல்லாம் நடுங்குதா.? ஒரு கவலையும் வேண்டாம் இந்த 3 பழம் போதுமே.!
  • 13:19PM Jul 04,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 13:19PM Jul 04,2019 India

ஒரு பழக்கத்தை தொடர்ச்சியாக செய்து வந்து திடிரென அதனை நிறுத்திவிட்டால், பித்து பிடித்தது போன்ற மனநிலை உண்டாகும். போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை உடனே நிறுத்து சொல்லி கட்டாயப்படுத்தினால் தலைவலி, பிரம்மை பிடித்தது போன்ற உணர்வு, நிதானமின்மை போன்ற பல அறிகுறிகளை அவர்களிடத்தில் காண முடியும். இதற்கு ஒரே தீர்வு படிப்படியாக குறைத்து, மனதளவில் அவர்களே அந்த பழக்கத்தை விடும் வரையில் பொறுமை காக்க வேண்டும். அப்போது தான் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

உடனடியாக சரி செய்கிறோம் என்று கூறி, போதை, புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த மருந்துகள் கொடுத்து சரி செய்ய முயற்சி செய்வார்கள். ஒரு சில வருடம் கழித்து அவர்கள் உடம்பை பரிசோதித்து பார்த்தால், போதை பொருளின் தாக்கத்தோடு மருந்தின் தாக்கமும் சேர்ந்து இருக்கும். இப்படி எல்லாம் நடக்காமல் முழுமையாக குணப்படுத்த ஒரே வழி உணவு மட்டும் தான். அதோடு சேர்த்து மனதளவில் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். சமீபத்தில் புகைப்பழக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

மருந்து மாத்திரைகளை கொடுத்து புகைப்பழக்கத்தை நிறுத்துவதை விட, ஒரு சில பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நுரையீரலின் செயல்பாடு மேம்படுவதை கண்டறிந்துள்ளனர். தக்காளி, வாழைப்பழம், ஆப்பிள் இந்த மூன்றும் இருந்ததால் போதுமாம். புகைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட நுரையீரலை சீரமைக்க முடியும். தக்காளியில் இருக்கும் லைகோபைன் நுரையீரலுக்கு நல்லதாம். வாழைப்பழத்தில் இருக்கும் அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நுரையீரலை சீரமைக்க உதவுகிறது.

இதே போல ஆப்பிள் பழத்திலும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்து இருக்கிறது. இது மூச்சு விடுவது தொடர்பான பிரச்சனையை சரி செய்கிறது. தக்காளி, வாழைப்பழம், ஆப்பிள் இந்த மூன்று பழங்களையும் சரியான அளவில் உணவில் சேர்த்துக்கொண்டு வந்தாலே, புகைப்பிடிக்கும் பழக்கம் குறையுமாம். அதன் பிறகு படிப்படியாக புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் எல்லாம் சீராகி பழைய நிலைமைக்கு வர முடியும் என்பது ஆச்சர்யம் தானே. | மது அருந்திவிட்டுப் போதையில் உடலுறவு வைத்துக்கொள்ளலாமா?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top