#Eco Tourism: அது என்ன சூழல் சுற்றுலா? இந்த சுற்றுலாவில் என்னவெல்லாம் செய்வார்கள்? தெரிந்துகொள்வோமா?
  • 18:28PM Jun 01,2020 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 18:28PM Jun 01,2020 Kodambakkam

இந்த காலத்தில் அதிகப்படியான இயற்கை வளங்களைக் கொண்ட சுற்றுலாத் தளங்கள் தான் அதிகப்படியான அளவில் மாசுபடுகின்றது. இதற்கு காரணம் முழுக்க முழுக்க சுற்றுலா வாசிகள் மட்டும் தான் என்கிறது ஒரு கருத்துக் கணிப்பு. ஒவ்வொரு சீசனுக்கும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இயற்கையான மலைப்பகுதிகள் அதிகப்படியான சுற்றுலா வாசிகளின் வருகையால் மாசுபடுகிறது என்கின்றது அந்த கருத்துக் கணிப்பு. இந்த விபரீதங்களில் இருந்து அந்த இயற்கையின் இருப்பிடமான சுற்றுலாத் தளங்களை பேணிக் காக்கவே உருவாக்கப்பட்டது தான் இந்த சூழல் சுற்றுலா.

55.jpg

சூழல் சுற்றுலா என்றால் என்ன? நாம் செல்லும் இயற்கை வளம் மிக்க சுற்றுலாத் தளங்களின் உயிரியல் சூழல் கொண்ட பழங்கால பண்புகள் மாறாமல், அந்த பகுதியில் வாழும் உள்ளூர் மக்களின் உதவியோடும், அந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சியை மனதில் வைத்தும் மேற்கொள்வது தான் இந்த சூழல் சுற்றுலா. இதில் சுற்றுலா நோக்கம் இருந்தாலும், ஆடல், பாடல், கொண்டாட்டம் என்ற கேளிக்கை விஷயங்கள் இருந்தாலும் அந்த குறிப்பிட்ட இடத்தின் இயற்கை பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்போது புரிகிறதா இந்த சூழல் சுற்றுலா என்றால் என்ன இது இந்த காலத்தில் எவ்வளவு முக்கியமான ஒன்று என்று?

44.jpg

பெரும்பாலான இளைஞர்கள் கும்பல் கும்பலாக கிளம்பி பிடித்தமான மலைப்பகுதிக்குச் சென்று குடியும் கொண்டாட்டமுமாக இருந்துவிட்டு அந்த இடத்தை குப்பை தொட்டி என்றாக்கிவிட்டு சென்று விடுகிறார்கள். இவர்கள் ஒரு பக்கம் இருக்கு ஒரு பஸ் நிறைய குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் சுற்றுலா வாசிகள் அவர்கள் செல்லும் இடமெல்லாம் பிளாஸ்டிக் குப்பைகளை போட்டு அவர்கள் வந்து சென்றதற்கான அடையாளத்தை உருவாக்கிவிட்டு சென்று விடுகிறார்கள். இத்தகைய போக்கை நிறுத்த இந்த சூழல் சுற்றுலா ஒரு முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது.

66.jpg

பள்ளி மாணவர்களை சாதாரணமான சுற்றுலாவிற்கு அழைத்து செல்லாமல், இந்த சூழல் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றால் அது அடுத்த தலைமுறையினருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய ஆசிகளில் ஒன்றாகும் என்பது எனது தனிப்பட்டக் கருத்து. அமைதியான இயற்கை சூழ்நிலை, சுத்தமான காற்று, துள்ளிக் குதித்து ஒடி வரு ஆறு, ரம்மியமான இயற்கை காட்சிகள், வனவிலங்குகளை அதன் இடங்களிலேயே பார்த்து ரசிப்பது, மலைவாழ் மக்களின் அன்பான உபசரிப்பு போன்ற பல நல்ல விஷயங்கள் அடங்கியது தான் இந்த சூழல் சுற்றுலா. பரபரப்பான நகரத்து வாழ்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த சூழல் கண்டிப்பாக உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top