தெலுங்கில் தெறிக்க போகும் “தெறி” படத்தின் புதிய அப்டேட்
  • 17:09PM Mar 15,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 17:09PM Mar 15,2019 Kodambakkam

கடந்த 2௦16 ஆம் ஆண்டு நடிகர் இளைய தளபதி விஜய் அவர்கள் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்த திரைப்படம் “தெறி”. இந்த படம் தளபதி ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. வர்த்தக ரீதியாக வெற்றி பெற்ற இந்த படம் தற்பொழுது தெலுங்கில் ரீமேக்காக உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வந்தன. தற்பொழுது இந்த தெலுங்கு ரீமேக் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகர் ரவி தேஜா நடிக்க இருக்கிறார். மேலும் இந்த தெலுங்கு படத்திற்கு “கனகதுர்கா” என்று பெயரிட்டுள்ளனராம் படக்குழுவினர்.

theri-tamil-box-office-collection-1.jpg

தெலுங்கு திரையுலகில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக பரினாமித்த திரு.சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இந்த தெலுங்கு ரீமேக்கை இயக்க இருக்கிறார். இவர் கடைசியாக இயக்கிய “hyper” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை கேத்தரின் தெரசா நடிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.

1552637339.jpg

Top