நெருக்கடியை உணர்ந்து ஸ்ரீநகரில் பிரபல ஹோட்டல் எடுத்திருக்கும் அதிரடி முடிவு...
  • 20:00PM Feb 28,2019 Srinagar
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 20:00PM Feb 28,2019 Srinagar

காஷ்மீரின் கோடைக்கால தலைநகராக விளங்கி வருகிறது ஸ்ரீநகர். புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, நமது இந்திய ராணுவன் எடுக்கும் அதிரடி முடிவுகள் இந்தியர்களான நம்மை தலைநிமிர செய்துள்ளது. பாகிஸ்தானிலும் மற்றும் POK ஆகிய இடங்களில் நமது இந்திய ராணுவத்தை சேர்ந்த AIRFORCE JeM கேம்புகளை தரைமட்டமாகியிருக்கும் இந்த நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிலைமை கொஞ்சம் மோசமாக மாறி வருகிறது. எந்த நேரமும் எதும் நடக்கலாம் என்று பொதுமக்கள் அதிர்ந்த நிலையில் இருக்கின்றனர். நிலவரம் எப்படி என்றால் ஜம்மு, லே, ஸ்ரீநகர், பதான்கோட், சிம்லா, கங்ரா, குழு-மணாலி, pithoragarh ஆகிய இடங்களில் இருக்கும் விமான நிலையங்கள் மூடப்படும் அளவிற்கு சென்றுள்ளது. மேலும் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வரும் தேசிய நெடுஞ்சாலையும் நிலச்சரிவு காரணமாக கடந்த திங்கள் முதல் மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

page.jpg

இதனால் மக்கள் ஊருக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். காஷ்மீர் வாசிகளுடன், சுற்றுலா வாசிகளும் இந்த நிலவரத்தில் சிக்கித்தவிக்கும் நிலைமை உண்டாகியுள்ளது. இந்த பதற்றமான சூழ்நிலையை கவனத்தில் கொண்டு, ஸ்ரீநகரில் இருக்கும் பிரபல ஹோட்டலான “The Kaisar” தங்கும் விடுதியையும், உணவையும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலம் வரை இலவசமாக்கி உள்ளது. ஹோட்டலின் இந்த செயலால் பலர் காப்பாற்ற பட்டுள்ளனர். இதனால் வலைத்தளங்களில் அனைவரும் இந்த ஹோட்டலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

5.jpg

Top