உண்மைக்கு வேஷமில்லை
  • 07:57AM Oct 05,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 07:57AM Oct 05,2017 Chennai, Tamil Nadu 600003, India

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது.நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அரசியலில் ஈடுபடலாம் என்று அனைவருக்கும் தெரிந்ததே. இருந்தும் ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்பேன் என்று அனைவரும் கூறுகின்றனர்.

e16ca4bacc52d044b2d6dbd2552f6c27--super-star-bus.jpg

அவரை அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்கு அவரவருக்குத் தனிப்பட்ட பல காரணம் இருக்கலாம் ஆனால் அவர் தமிழர் இல்லை என்று கூறி ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்..? "நான் என் வாழ்நாளில் நாற்பது ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்துள்ளேன் என்னை நீங்கள் (தமிழ் மக்கள்) ஒரு பச்சை தமிழனாக மாற்றிவிட்டிர்கள்" என்று அவரே ஒரு இடத்தில் கூறியிருக்கிறார்.

rajinikanth-1495354206.jpg

ரஜினிகாந்த் காவிரி பிரச்சினையில் தலையிடவில்லை என்றும் அவர் கன்னடிகா என்பதால் கர்நாடகாவிற்கு ஆதரவாக இருக்கிறார் என்று பலரும் குற்றம் சாட்டினார் .சற்று திரும்பி பார்த்தால் தெரியும்..

“அக்டோபர் 13, 2002 சென்னை சேப்பாக்கத்தில் மக்கள் கூட்டமாகத் திரண்டு வந்தனர் காரணம் ரஜினிகாந்த் அவர் தமிழகத்திற்குத் தண்ணீர் தராத கர்நாடக அரசை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்டார்.”

அன்று பாராட்டிய பலரும் இன்று அதைப் பற்றிப் பேசாமல் இருப்பது நியாயமா.?

pjimage (21).jpg

தமிழக மக்களுக்காக அவர் என்ன செய்தார் என்று சிலர் கேட்கிறார்கள்.கேட்கும் அனைவரும் சற்று யோசிக்க வேண்டும் அவரும் நம்மைப் போல் ஒரு மனிதர் நாம் யாரிடம் கேட்க வேண்டுமோ அவர்களிடம் கேட்காமல் இவரிடம் வந்து கேட்கிறோம் இருந்தும் அவர் யாருக்கும் உதவாமல் இல்லை.தமிழக மக்களுக்காகத் தன் வாழ்நாட்களுக்கு பின் தன்னுடைய மொத்த சொத்தில் பாதிக்கும் மேல் தமிழக மக்களுக்குத் தான் என்று ஒரு மேடையிலேயே அறிவித்தார்.இதை விட ஒருவரால் தமிழக மக்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ரஜினி பயந்துவிட்டார் என்று சிலர் கூறுகின்றனர் சற்று ரஜினி அவர்கள் பேசிய பதிவுகளைப் பார்த்தால் தெரியும் அவரைவிட வெளிப்படையாக இன்று யார் பேசுவார் என்று கூறுங்கள்..??

12slde5.jpg

இன்று அவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அவர் வந்தால் மாற்றம் வரும் என்று கூறவில்லை ஆனால் நிச்சயம் அது தமிழக அரசியலில் ஒரு மிகப் பெரிய திருப்பமாக இருக்கலாம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top