#The Grudge: ஒரே நாளில் 1.9 மில்லியன் வியூஸுடன் ரசிகர்களை கதிகலங்க வைத்து வரும் ட்ரைலர்!!!
  • 22:48PM Oct 29,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 22:48PM Oct 29,2019 Kodambakkam

பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் மடிக் கணினியில் இருக்கும் பிரபலமான ஹாலிவுட் பேய் படங்களில் இதுவும் ஒன்று. ஆம் அந்த அளவிற்கு உலக புகழ் பெற்ற ஒரு திகில் படம் தான் இந்த “The Grudge” எனும் ஹாலிவுட் திரைப்படம். இந்த படத்தை 2002 ஆம் ஆண்டு ஜப்பானிய இயக்குனர் “டகாஷி” என்பவர் இயக்கினார். பிறகு ஹாலிவுட்டில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகத்தை தொடர்ந்து இயக்கினார். தற்பொழுது இந்த படத்தின் புதிய அத்தியாயத்தை ஹாலிவுட் இயக்குனர் நிக்கல்சன் என்பவர் இயக்கி உள்ளார். நேற்று (28/10/2019) இந்த படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியானது. ஒரே நாளில் பதினெட்டு லட்ச பார்வையாளர்களை இந்த ட்ரைலர் பெற்றுள்ளது. இந்த படத்தின் சிறப்பம்சமே படத்தில் வரும் பேயின் தோற்றம் மற்றும் பேயிக்கென்று கொடுக்கப்பட்ட சப்தம் தான். இந்த புதிய அத்தியாயத்தில் அந்த சத்தத்தை BGM-மாகவே பயன்படுத்தி உள்ளனர். படத்தின் பிரத்தியேக ட்ரைலர் இதோ உங்களுக்காக.

The Grudge - Official Trailer

#The Grudge: படத்தின் இயக்குனர் கூறுகையில் "படத்தில் வரும் சம்பவங்கள் பழைய பாகங்களுடன் ஒத்து போகும் ஆனால் கதை புதுமையாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top