#தளபதி63 முக்கிய பிரபலங்களின் ரகசிய கதாப்பாத்திரங்கள் இதுதான்...
  • 15:45PM Apr 13,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 15:45PM Apr 13,2019 Kodambakkam

தமிழ் சினிமாவில் தனது ரசிகர்களிடையே ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல் ஒரு நண்பனாகவும் பழகும் ஒரு முன்னணி நடிகர் நமது இளையதளபதி விஜய் அவர்கள். “சர்கார்” படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்து வரும் புதிய படத்தை பற்றி வெளிவரும் ஒவ்வொரு தகவல்களும் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெறி, மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில்  தளபதி அவர்கள் பெயரிடப்படாத அவரது 63 ஆவது புதிய படத்தில் நடித்து வருகிறார்.

D1dpixvVsAE4whn.jpg

இந்த படத்தில் இளைய தளபதியுடன் இணைந்து காமெடி நடிகர் விவேக், யோகிபாபு, நடிகர் கதிர், டேனியல் பாலாஜி, பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராஃப், படத்தின் கதாநாயகியாக நயன்தாரா என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் ஆறுகோடி செலவில் ஒரு கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்தது. இந்த படப்பிடிப்பு பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் தற்பொழுது வெளியாகி வருகின்றன.

D4BguCAUEAAhBxg.jpg

படத்தில் விஜய் அவர்கள் கால்பந்தாட்ட பயிற்சியாளராகவும், பதினோரு பெண்களை கொண்ட கால்பந்தாட்ட அணிக்கு அவர் பயிற்சி சொல்லித்தருவது போலவும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மேலும் நடிகர் விவேக் மற்றும் யோகிபாபு இருவரும் இளைய தளபதிக்கு உதவியாளராக நடித்தது தெரியவந்துள்ளது. விஜய், யோகிபாபு மற்றும் விவேக் மூவரும் படப்பிடிப்பில் கோட்டு-சூட்டு அணித்திருந்ததாகவும் படப்பிடிப்பை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

D297XgcUkAAI8uU.jpg

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top