கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் செல்லும் தளபதி 63!
  • 10:09AM Dec 06,2018 Los Angeles
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 10:09AM Dec 06,2018 Los Angeles

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் “சர்கார்” படத்தை தொடர்ந்து நடிகர் இளைய தளபதி விஜய் நடிக்கும் 63 வது திரைப்படம் இயக்குனர் அட்லீ இயக்கம் புதிய திரைப்படம். இந்த படத்தை “ஏ.ஜி.எஸ்” தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாக முடிவாகியுள்ளது. இதுவரை இல்லாதது மாதிரியான இளைய தளபதியின் புதிய பரிணாமத்தை எல்லோரும் ரசிப்பார்கள் என்று இயக்குனர் அட்லீ கூறியதில் இருந்து இந்த படத்திற்கு பயங்கரமான வரவேற்பு தளபதி ரசிகர்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, ஆர்ட் டைரெக்டராக முத்துராஜ், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் அனல் அரசு மற்றும் பாடலாசிரியர் விவேக் என அட்லீயின் “மெர்சல்” கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது.

12.jpg

தமிழக லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இந்த படத்தில் இளைய தளபதியுடன் நடிக்க உள்ளதாக வெளிவந்த தகவலை தொடர்ந்து. “மேயாத மான்” படத்தின் மூலம் பிரபலமான நடிகை இந்துஜா” நடிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது. தற்போது இயக்குனர் அட்லீ, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவுடன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படத்தை, அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படம் சம்பந்தமான முதற்கட்ட வேலைகளை அமெரிக்காவில் ஆரம்பித்த செய்தி கேட்டு. படம் கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு போவதாக தளபதி ரசிகர்கள் வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

11.jpg

Top