#TelanganaSchool இங்க தண்ணியே இல்ல! உங்களுக்குத் தலை குளிக்கணுமா? மோசமான முடிவெடுத்த தலைமையாசிரியர்!
  • 17:56PM Aug 14,2019 Medak
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:56PM Aug 14,2019 Medak

தெலுங்கானா மாநில பள்ளி தலைமையாசிரியர் தண்ணீர் பிரச்சனை காரணமாகப் பள்ளி மாணவிகளுக்கு அநியாயத்தை இழைத்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தின் மெதக் நகர அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு மாணவிகளுக்குத் தேவையான அணைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்பதால் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவிகள் இங்குப் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தப் பள்ளியில் இருந்த ஆழ்குழாய் கிணறு வறண்டதால் 3 நாட்களுக்கு ஒருமுறை டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தண்ணீர் இல்லாத நேரத்தில் மாணவிகள் குளிப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் செலவழிப்பதாகத் தலைமையாசிரியர் அருணா ரெட்டி தெரிவித்தார். அதேபோல மாணவிகளுக்குத் தலைமுடி நீளமாக இருப்பதால் தான் குளிப்பதற்கு அதிகத் தண்ணீர் செலவாவதாகக் கருத்தியுள்ளார்.

இதனால் அங்குத் தங்கியிருந்த 180 மாணவிகளின் தலை முடியையும் வெட்டி "கிராப்பு" கட்டிங் செய்துள்ளார். இந்த நிலையில், மாணவிகளைச் சந்திப்பதற்காக அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது "கிராப்பு" கட்டிங்குடன் தங்களது குழந்தைகளைப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்தத் தலைமையாசிரியை மீது கோபமடைந்த பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் செய்தி தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top