#Murder பிரபலமாக வேண்டும் என்ற வெறி, இந்த வாலிபரை என்ன செய்ய வைத்திருக்கு பாருங்க!
  • 12:57PM Mar 26,2020 London
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 12:57PM Mar 26,2020 London

பிரபலமாக வேண்டு என்பது சிறுவயதில் இருந்து ஒவ்வொருவரின் மனதில் ஊறியிருக்கும் ஒரு ஆசை. அனைவரது மனதிலும் இந்த ஆசை இருக்கும், ஆனால் அதனைச் சரியான முறையில் உழைப்பின் மூலம் பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவு. சில நபர்கள் பிரபலமடைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத் தங்களின் அறியாமையால் குற்றங்களையும் செய்யத் துணிவார்கள். அப்படியொரு ஆசையில் தான் இந்த வாலிபரும் செய்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள ஈலிங் நகரை சேர்ந்தவர் ஜான்டி பிரேவரி.

18 வயதாகும் இவர் இரு மாதங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள டேட் மாடர்ன் அருங்காட்சியகத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு 6 வயது சிறுவன் தனது தாயுடன் அருங்காட்சியகத்துக்கு வந்துள்ளான். இந்தச் சிறுவனைப் பார்த்துக்கொண்டே இருந்த ஜான்டி திடீரென அந்தச் சிறுவனைத் தூக்கிக்கொண்டு 10-வது மாடிக்கு ஓடினான். அங்கு இருந்த காவலர்கள் ஜான்டியை துரத்தி சென்றனர். ஆனால் அதற்குள் ஜான்டி 10-வது மாடிக்கு சென்றுவிட்டான். இவர்கள் அனைவரும் மேலே வரும்போது அங்கிருந்த ஜன்னல் வழியாக ஜான்டி அந்தச் சிறுவனைத் தூக்கிப்போட்டான். இதில் 5-வது மாடியில் இருந்த குறையில் அந்தச் சிறுவன் விழுந்து பலத்த காயத்துடன் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஜான்டியை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக லண்டன் நகரக் கோர்ட்டில் ஜான்டி ஆஜர்படுத்தப்பட்டான். கோர்ட்டுக்கு வந்த ஜான்டி எந்தப் பயமுமின்றிச் சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும், டி.வி. மற்றும் பத்திரிகைகளில் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காகவும் தான் இப்படிச் செய்ததாகக் கூறி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். ஜான்டியின் இந்த ஒப்புதலை கேட்டு கோர்ட்டே அதிர்ந்தது. ஜான்டியை குற்றவாளி எனக் கூறி தீர்ப்பு அளித்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரம் வருகிற பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். பிரபலம் ஆகவேண்டம் என்ற ஆசை மனிதனை எப்படி மாற்றியுள்ளது என்பது இந்தச் செய்தியை பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top