#Stranger Calls: இந்த app இருந்தா unknown நம்பரின் பெயர் மட்டுமல்ல ஜாதகத்தையே எடுத்திடலாம்!!!
  • 15:13PM Jul 13,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 15:13PM Jul 13,2019 Kodambakkam

“நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே” இந்த பாடல் எதற்கு பொருந்துகின்றதோ இல்லையோ ஸ்மார்ட் ஃபோன்களுக்கு கண்டிப்பாக பொருந்தும். இந்த காலத்தில் கையில் ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் தான் அகிலமே அசையும் போலிருக்கிறது. அந்த அளவிற்கு மொபைல் ஃபோன்களின் நமக்கு அத்தியாவிசய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. ஒரு ஸ்மார்ட் ஃபோன் உங்கள் கையில் இருந்தால் உங்கள் உள்ளங்கையில் ஒரு கேமரா, ஒரு ரேடியோ செட், ஒரு MP3 பிளேயர், ஒரு டெலிஃபோன், ஒரு பேஜர், ஒரு WORLD MAP ஆகியவை இருப்பதாக அர்த்தம்.

11.jpg

இந்த ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்கள் யாரை வேண்டுமானாலும் நாம் எளிதில் தொடர்பு கொள்ள முடியும், அதே போல யாரும் நம்மை எளிமையாக தொடர்பு கொள்ள முடியும். ஆரம்ப காலக்கட்டதில் நமக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் யாரிடம் இருந்து வருகிறது என்று அறிந்துகொள்ள முடியாமல் இருந்தது “TrueCaller” எனும் app அறிமுகமானதும் நம்மை யார் தொடர்பு கொள்கிறார் என்பதனை அலைபேசியை ஆன் செய்யாமலே நாம் தெரிந்துகொள்கின்றோம்.

12.jpg

இந்த TrueCaller நம்மை தொலைபேசியில் அழைப்பவரின் பெயர் என்ன என்பதனை குறிப்பிட்டு சொல்லும். அந்த பெயர் அழைக்கும் நபரின் உண்மயான பெயராக இருப்பதில்லை. பிறர் அந்த நபரின் பெயரை எப்படி அவர்களது மொபைல் ஃபோனில் பதிவு செய்து வைத்துள்ளாரோ அந்த பெயர் தான் TrueCallerரில் நமக்கு காண்பிக்கப்படும். உதாரணத்திற்கு ஒரு Electricianனாக இருந்தால் பலர் அவரது தொலைபேசி எண்ணை “Electrician” என்று தான் அவர்களது ஸ்மார்ட் ஃபோனில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். அந்த பெயர் தான் TrueCallerரில் நமக்கு காண்பிக்கப்படும்.

14.png

ஆனால் TrueCallerரின் சேவையையும் தாண்டி நம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நபரின் பெயர், புகைப்படம் மற்றும் முகவரி ஆகிய அனைத்தையும் நமக்கு முன்கூட்டியே குறிப்பிட்டு காட்டும் ஒரு app வந்துள்ளது அது தான் EyeCon app. இந்த EyeCon எனும் appபை google play store மூலமாக நாம் தரையிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த காலத்தில் “பாஸ் புக்” கூட இல்லாமல் ஒருவர் ஸ்மார்ட் ஃபோன் வைத்திருக்கலாம். ஆனால் ஃபேஸ் புக் இல்லாமல் ஒருவர் ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பது என்பது அரிதிலும் அரிது. பலர் ஃபேஸ் புக்கில் மட்டும் இல்லாமல் டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஷேர் சாட் போன்ற பல சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகின்றனர்.

15.jpg

அதில் எல்லாம் அவர்களது தொலைபேசி எண்ணையும், ப்ரோஃபைல் புகைப்படத்தையும் நிச்சையம் பதிவு செய்து இருப்பார்கள். இந்த EyeCon app நம்மை தொடர்பு கொள்ளும் நபரின் எண்ணை சமூக வலைத்தளங்களில் ஆராய்ந்து அவரது பெயர் மற்றும் புகைப்படத்துடன் நமக்கு குறிப்பிட்டு காட்டிவிடும். இன்னும் ஏன் தாமதம் TrueCallerரை தூக்கிவிட்டு, EyeCon appபை தரையிறக்கம் செய்யுங்கள். இந்த app பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நீங்களும் பயனடைந்து உங்கள் சகோதர, சகோதரிகளுக்கு இந்த appபை அறிமுகம் செய்திடுங்கள் நன்றி.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top