#Technology: உலக நாயகன் அவர்களால் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட தொழில்நுட்பங்கள்!!!
  • 15:50PM Oct 15,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 15:50PM Oct 15,2019 Kodambakkam

உலக அளவில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய அடையாளமாக பார்க்கப்படும் கலைஞர்களில் முக்கியமானவர் நம்மவர். தமிழ் சினிமாவில் புது புது டெக்னாலஜிகளை பிரயோகம் செய்து பார்ப்பதில் அதிகமாகவே ஆர்வம் காட்டும் நபர்களில் முதன்மை வகிப்பவரும் இவர் தான். அந்த வகையில் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய டெக்னாலஜிகள் என்னென்ன என்பது பற்றித்தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

2.jpg

#1. தமிழ் சினிமாவில் முதல் முறை “ஸ்டெடி கேமரா” என்ற ஒரு கேமரா அறிமுகப்படுத்தப்பட்ட திரைப்படம் உலக நாயகன் நடித்த “குணா” திரைப்படம் தான்.

#2. அனிமேஷன் டெக்னாலஜியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்த படம், உலக நாயகன் அவர்கள் முதல் முறை தயாரித்து நடித்த “ராஜ பார்வை” திரைப்படம் தான். இது கமல் அவர்கள் நடித்த நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

#3. உலக நாயகன் கமல் அவர்கள் ஒளிப்பதிவாளர் “P.C.ஸ்ரீராம்” அவர்களது இயக்கத்தில் நடித்த “குருதிப்புனல்” படத்தில் தான் dts எனும் “டிஜிட்டல் தியேட்டர் சிஸ்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் Dolby sound system-மும் அறிமுகப்படுத்தப்பட்டது.

#4. இயக்குனர் ஷங்கர் அவர்கள் இயக்கிய “இந்தியன்” படத்தில் உலக நாயகன் அவர்களால் முதல் முறை செயற்கை ஒப்பனை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பல இறுக்கங்களை கொடுக்கும் செயற்கையான முகமூடி ஒன்றை செய்து அதை முகத்தில் பொருத்தி நடித்தார் கமல் ஹாசன்.

#5. தற்பொழுது குறும்படம் எடுக்கும் இளைய சமுதாயத்திற்கு AVID எனும் படத்தொகுப்பு செய்யும் சாப்ட்வேர் கைவந்த ஒரு கலையாக இருக்கிறது. இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி படத்தொகுப்பு செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் “மகாநதி”

#6. ஆசியாவிலேயே முதல் முறையாக சண்டைக் காட்சிகளுக்காக “மோஷன் கிராபிக்ஸ் கேமரா” பயன்படுத்தப்பட்ட திரைப்படம் “ஆளவந்தான்”.

#7. தமிழ் சினிமாவில் முதல் முறை டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தி முழு படமும் எடுக்கப்பட்ட ஒரு படம் “மும்பை எக்ஸ்பிரஸ்”.

#8. தமிழ் சினிமாவில் டபுள் ஆக்ஷன் காட்சிகளில் கேமரா ஆங்கிள்கள் மட்டும் இன்றி மார்ஃபிங் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தி அதை சிறந்த முறையில் செயல் படுத்தி வெற்றியும் பெற்ற படம் “மைக்கில் மதன காம ராஜன்”. லேப்டாப் என்ற மணி கணினியை முதல் முறை திரைப்படத்தில் பிரயோகம் செய்த படமும் இது தான்.

#9. இதே போல முதல் முறை நிஜ கம்பியூட்டரை திரையில் காண்பித்த படம் கமல் ஹாசன் நடித்த “விக்ரம்” திரைப்படம் தான். இந்த படத்தில் காண்பிக்கப்பட்டது APPLE நிறுவனத்திடம் இருந்து பிரத்தியேகமாக வாங்கப்பட்ட கம்பியூட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

#10. தமிழ் சினிமாவில் Auro 3D தொழில்நுட்பத்தில் முதல் முறை உருவான திரைப்படம் உலக நாயகன் அவர்கள் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த “விஸ்வரூபம்” படம் தான்.

#Technology - மேலும் “விருமாண்டி” படம் தான் “லைவ் “எடிட்டிங்” மற்றும் செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top