#Teacher Eligibility : எத்தனை டீச்சர்ஸ் தலை உருளப்போகுதோ.? ஒரே போடாய் போட்டுத்தள்ளிய தமிழக அரசின் நடவடிக்கை.!
  • 12:41PM Jun 08,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 12:41PM Jun 08,2019 Tamil Nadu

தமிழகம் முழுவதும் TETனு சொல்ற ஆசிரியர் தகுதி தேர்வு இன்னைக்கு தொடங்கி இருக்கு. இன்னைக்கும், நாளைக்கும் (ஜூன் 8) இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கு. இந்த தேர்வ 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் எழுதுகிறாங்க. மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேருவதற்கு TETனு சொல்லுற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்னு உத்தரவு போட்ருக்காங்க.

தமிழகத்தில் இந்த தேர்வ TRPன்னு சொல்லுற ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தறாங்க. அதே மாதிரி 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 பிறகு வேலையில சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கனும்னு சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கு. அவர்களும் இந்த தேர்வ எழுத இருக்காங்க.

இந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த மார்ச் மாசம் 15 ஆம் தேதியில இருந்து கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி வரைக்கும் இணையதளம் மூலமா மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பிச்சு இருக்காங்க. விண்ணப்பிச்சவங்களுக்கு TET exam  Hall Ticket கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியிட்டாங்க.

இவங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தான் இன்னைக்கும், நாளைக்கும் தமிழகம் முழுவதும் நடைபெற போகுது. இன்னைக்கு (சனிக்கிழமை) முதல்தாள் தேர்வும், நாளைக்கு (ஞாயிற்றுக்கிழமை) 2 ஆம் தாள் தேர்வும் நடக்குது. 1 ஆம் வகுப்புல இருந்து 5 ஆம் வகுப்பு வரை ஆசிரியராக பணியாற்ற முதல் தாள் தேர்வை எழுதணும். அதுவே  8 ஆம் வகுப்பு வரை பணியாற்ற 2 ஆம் தாள் தேர்வையும் எழுதநும். இதுக்காக தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 1,552 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கு.

Share This Story

முருகானந்தம்

Top