#Tattoos திரிஷா போல நெஞ்சில டாட்டூ குத்த ஆசையா? அப்போ முதல் இத படிங்க!
  • 11:50AM Jun 17,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 11:50AM Jun 17,2019 Chennai

பொதுவாக டாட்டூ குத்துவதில் இரண்டு வகை உள்ளது, ஒன்று நிரந்தரமானது, மற்றொன்று தற்காலிகமானது. தற்போது டாட்டூ குத்திக்கொள்வது ஒரு தனி ஸ்டைலாக மாறிவிட்டது. திரிஷா நெஞ்சில் பளிச்சென்று தெரியும் டாட்டூவை போல அனைவரும் தங்களுக்குப் பிடித்த எழுத்து அல்லது உருவத்தை டாட்டூ குத்திக்கொள்கின்றனர். டெம்ரவரி டாட்டூஸ் ஒரு வாரத்தில் தானாக அழிந்துவிடும். இவை பார்ட்டி, எதாவது நிகழ்ச்சி போன்றவற்றில் அழகாகத் தெரிவதற்காகப் போட்டுக்கொள்வது. ஆனால் பெர்மனென்ட் டாட்டூஸ் அப்படியில்லை. நம் வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்கும்.

முன்பெல்லாம் ஒரே நிறத்தில் தான் பச்சைகுத்துவார்கள், ஆனால் தற்போது டெக்னாலஜியின் வளர்ச்சியால் விரும்பும் நிறத்தில் வசதியான இடத்தில விதவிதமாக டாட்டூ குத்திக்கொள்கின்றார்கள். மை டெக்னாலஜி,காட்ரிஜ் ஊசி போன்றவற்றால் காலத்துக்கும் அழியாதவாறு டாட்டூ போட்டுக்கொள்கின்றனர். இப்படிப் பெர்மனென்ட் டாட்டூ போடுபவர்கள் நன்கு யோசித்து முடிவு செய்தபின் டாட்டூ குத்திக்கொள்ளவேண்டும். ஏனென்றால் பெர்மனென்ட் டாட்டூஸ் நாம் இறந்து, நமது உடல் புதைக்கப்பட்டு மக்கினாலும் நம் எலும்பில் டாட்டூவின் பதிவு இருக்கும். காலம் முழுக்க நிழலை போலக் கூடவே வரும். நீங்கள் குத்திக்கொண்டு நிரந்தர டாட்டூவை அழிக்க லேசர் சிகிச்சை இருந்தாலும், அதனை முழுவதுமாக அழித்துவிடும் என்று கூறமுடியாது. சிலர் அடர் நிறத்தில் ஸ்டைலாக டாட்டூ குத்தியிருப்பார்கள். இதனை நிக்கப் பல முறை லேசர் செய்ய வேண்டும்.

அதேபோலப் பெர்மனென்ட் டாட்டூவை அழிக்கமுடியாதவர்கள் அதன் மேல் வேறொரு வடிவத்தை டாட்டூ குத்திக்கொள்வார்கள். ஆனால் இத்தனை முறை டாட்டூ போடுவதால் சிலருக்கு சரும பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பெர்மனென்ட் டாட்டூஸ் போடும்போது அதிகப்படியான வலியும், அரிப்பும் ஏற்படும். சிலர்க்கு இந்த வலி மற்றும் அரிப்பு நீங்க 10 நாட்களுக்கு மேல் ஆகும். அதேபோலச் சிலர் தங்களுக்கு வேண்டிய நிறத்தில் டாட்டூ குத்துவார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த நிறம் வருவதற்காகப் பயன்படுத்தப்படும் மையில் ரசாயனங்கள் சேர்க்கப்படும். இந்த ரசாயனங்கள் அவர்களின் சருமத்தில் பாதிப்பை உண்டாகும். உடல் பாதிப்பும் உண்டாக வாய்ப்புள்ளது. சிலர் கடையில் மருதாணியைப் பார்த்ததும் வேகமாகச் சென்று போட்டுக் கொள்வார்கள். மருதாணியும் ஒருவகையில் தற்காலிக டாட்டூ போலத்தான். கடைகளில் விற்கும் பாக்கெட் மருதாணிகளில் பி.பி.டி என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது சருமத்தில் ஒவ்வாமையை உண்டாக்கும்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top