வாக்குறுதி பத்திரமா..?? வேட்பாளர்களின் ஸ்மார்ட் ஐடியா..?? இதுவரை எந்த கட்சியாவது இப்படி செய்ததுண்டா?
  • 23:08PM Apr 11,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 23:08PM Apr 11,2019 Chennai

தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் தொகுதி மக்களுக்கு வடசென்னை வேட்பாளர் காமேஷ் அவர்களின் உறுதி மொழி பத்திரம்..மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு இதை செய்ய துணிவு இருக்கிறதா என தெரியவில்லை.இவரது இந்த செயல் பாராட்டத்தக்கது.

7 கட்டங்களாக நடைபெறவுள்ள லோக்சபா எலெக்ஷன் மற்றும் தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் காலியாக உள்ள 21 தொகுதிகளுள் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாகியுள்ளன..

2 அல்லது 3 கார்களுடன் தங்களது புகழை பாட பிரபலங்ளை வைத்து பிரச்சாரம் செய்யும் கட்சிகள் மத்தியில் உண்மையிலே மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள சிலர் , பிழைப்பிற்கு ஆதாரமாக இருக்கும் தங்களது வேலைகளை விடுத்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்பில் அரசியலில் இறங்கியுள்ளனர்.LKG படத்தில் பாலாஜி கூறுவது போல மக்கள் இப்போது வரை 2 கட்சிகளையே பார்க்கின்றனர். அதை விட்டால் இது ,இதை விட்டால் அது என்ற போக்கில் உள்ளனர்..

மக்களின் அகல பார்வைக்கான நேரம் இது, சொகுசு காரில் பிரச்சாரம் , பிரபலங்களின் ஆதரவு என இதுவரை அவர்கள் மாநிலத்திற்கு செய்தது என்ன?? என்பதையெல்லாம் சிந்தித்து ஓட்டு போட வேண்டும்...யாருக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதாக இருந்தாலும் உள்ளார்ந்த சிந்தனையோடு மக்கள் செயல்பட வேண்டும்..

பணத்தை முதலீடாக கொண்டு கவர்ச்சி அரசியல் நடத்தும் வேட்பாளர்களின் மத்தியில்தனி ஒருவனாக திருச்சியில் ஐந்து நாட்களாக 7 கிராமங்களுக்கு வீடு வீடாக துண்டு பிரச்சாரம் செய்யும் கணேசன் அவர்கள் மற்றும் என்னால் தனியாளாக என்ன செஞ்சுர முடியும் என்று சிந்திக்கும் நபர்களுக்கு இடையே, துணிந்து போராடும் விருதுநகர் வேட்பாளர் திரு.பாக்கியராஜ், இவர்கள் சற்றே வித்தியாசமானவர்கள்..

திரு.பாக்கியராஜ் இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை போன்று பலர் எளிமையாக உங்க வீட்டுக்கு அருகாமையிலும் பிரச்சாரம் செய்திருக்ககூடும்..அந்த வாக்குறுதி நோட்டீசை கூட சரியாக படித்திருக்கமாட்டோம்..இதுவே காரில் ஒரு கூட்டம் தெரு முனையில் நிற்கிறது, ஹீரோ வந்துருக்கராறு என பக்கத்து வீட்டுகாரங்க சொல்லும் போது ஓடி போய் நின்று கொண்டு கேட்கிறோம்...அங்கேயும் வாக்குறுதிகளை கேட்கிறோமா..?

நம்முடைய இந்த அறியாமை கவர்ச்சி அரசியலுக்கு காரணமாகி விடுகிறது..பெரிதாக பில்டப் செய்தால் மட்டுமே ஏறெடுத்து பார்ப்போர் மத்தியில் மக்களுக்கு நல்லது மட்டுமே செய்யவேண்டும் என்ற நோக்கில் பிழைப்பை விட்டுவிட்டு, பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்களையும் மதித்து அவர்களது வாக்குறுதிகளை கேட்போமாக...அவர்களிடம் கூட வாக்குறுதி குறித்து கேள்விகளை எழுப்ப முடியும், மற்றவர்களிடம் ஆட்சியிலே கூட நடந்த,நடக்கும் விடயங்கள் குறித்து பேச முடியுமா ?

குடும்ப ஆதரவு,பலமான செல்வாக்கு என எந்த சாதகமாக சூழலும் இல்லாமல் மனைவி, உறவுகள் வேண்டாம் என கூறியும் ஏதோ ஒன்று சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அரசியலுக்கு வருவோர்களை ஆதரிப்போம்..

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top