#TNTET: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு! அறிந்ததும்!! அறியாததும்!!!
  • 00:18AM Oct 03,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 00:18AM Oct 03,2019 Kodambakkam

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை போதிப்பது மட்டுமல்ல ஒழுக்கம், பொது அறிவு, ஆற்றல், பழக்கவழக்கம் மற்றும் அனுபவம் என அனைத்தையும் மாணவர்களுக்கு கற்பித்து, அவர்களை சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக உருவாக்கும் ஓர் உன்னதமான பணிகளில் ஒன்று. பெரும்பாலான மாணவர்கள் ஆசிரியர் பணியை வேறு வழியின்றித் தேர்வு செய்கின்றனர். இக்காலத்தில் ஆசிரியராக ஆவதை ஆரம்பத்தில் இருந்து மனதில் கொண்டு அவர்கள் இந்த பணியை தேர்வு செய்வது இல்லை. கிடைத்தை படிப்போம் என்றும் தற்செயலாக இந்த பணியில் சேர்ந்தவர்களும் தான் இக்காலத்தில் அதிகமாக ஆசிரியர்களாக இருக்கின்றனர். ஓர் சிறந்த ஆசிரியராக பெயர் எடுப்பது தான் எமது லட்சியம் என்று இந்த பணியை கையில் எடுப்பவர்கள் மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே தான் இருக்கின்றனர். அப்படி உண்மையிலேயே நினைப்பவர்களுக்கு இந்த உன்னத பணிக்கு எப்படி தேர்வாவது மற்றும் அதற்கான நுழைவுத் தேர்வு, தகுதி தேர்வு பற்றி தெரிவதில்லை. ஆசிரியர் தகுதி தேர்வு என்று அழைக்கப்படும் TET (Teacher Eligibility Test) தேர்வு பற்றித் தான் இந்த பதிவில் நான் உங்களுக்கு சொல்லப்போகின்றேன்.

44.jpg

#1. கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டம் 2009, அடிப்படையாக வைத்து TET தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அளவில் CTET என்றும், மாநில அளவில் TET தேர்வு என்றும், தமிழகத்தை பொறுத்தவரை TNTET என்றும் இந்த தேர்வு நடத்தப்படுகின்றது.

#2. TET தேர்வில் மொத்தம் இரண்டு தாள்கள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்ளுக்கு முதல் தாளும், 6 முதல் 8-ம் வகுப்பு ஆசிரியர் பணியிடங்ளுக்கு இரண்டாம் தாளும் நடத்தப்படுகின்றன. ஒரு விண்ணப்பதாரர் இரண்டு தாள்களையும் எழுத முடியும்.

#3. இந்த TET தேர்வை எழுத தேவையான தகுதிகள், எழுத்து தேர்வான முதல் தாளை பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 4 ஆண்டு பி.எட் பயிற்சி பெற்றவர்கள் அல்லது இறுதி ஆண்டு படிப்பவர்கள் முதல் தாளை எழுதலாம். இது மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்டது.

#4. பட்டப்படிப்புடன், 2 ஆண்டு பி.எட் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இறுதி ஆண்டு படிப்பவர்கள், இரண்டாம் தாளை எழுதலாம். இது மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்டது.

#5. தேர்வு எழுத தேவையான வயது வரம்பு, 18 வயது முதல் 40 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தான்.

#6. இத்தேர்வை எழுத பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் ரூ. 500-ம், எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ. 200-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

#TNTET - தேர்வின் சமீபத்திய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளை நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். முந்தைய ஆண்டுகளின் கேள்வித் தாள்களை படிப்பது நல்லது, மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பாடத் திட்டத்தை படிப்பது பயனுள்ளதாக இருக்கும். மாதிரி தேர்வுகளை எழுதி பார்ப்பது சிறந்தது. பாடம் மற்றும் பாடத்திட்டத்திற்கு ஏற்றாற்போல், நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top