#Climax: ரசிகர்களுக்காகவே கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தமிழ் படங்கள்!!!
  • 19:44PM Oct 29,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 19:44PM Oct 29,2019 Kodambakkam

ஒரு ரசிகனை பொறுத்தவரையில் ஒரு திரைப்படம் என்பது திருப்திகரமான ஒன்றாக இருக்க வேண்டியது அவசியம். எந்த இடத்திலும் ரசிகனின் கவனம் சிதறாமல் அவனது முழு கவனமும் படத்தையும், படத்தில் நடக்கும் சம்பவங்களையும் சுற்றியே இருக்கும் படி செய்ய வேண்டியது இயக்குனரின் கடமை. இதை எல்லாவற்றையும் தாண்டி படத்தின் இறுதி காட்சிகள் என்பது ஒரு ரசிகனைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான ஒன்று. அதாவது கதையின் முடிவு ஒரு ரசிகனை சிந்திக்கச் செய்ய வேண்டும். “ஏன்டா இந்த படத்துக்கு வந்தோம்” என்று தோன்றும் படி அமைந்துவிடக் கூடாது. முழு படமும் நன்றாக இருந்தாலும் கூட கிளைமாக்ஸ் நன்றாக, அர்த்தபூர்வமாக இல்லை என்றால் அந்த படம் அதிக நாட்கள் தாக்குபிடிப்பது கஷ்டமான ஒன்று தான். இந்த காரணத்திற்காகவே, ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காகவே சில தமிழ் படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்படி நமக்கு தெரியாத, ரிலீஸுக்கு பிறகு கிளைமாக்ஸ் மாற்றி அமைக்கப்பட்ட தமிழ் படங்களைப்பற்றித் தான் நாம் இப்போது பார்க்க இருக்கின்றோம்.

2.jpg

#1. வசந்தமாளிகை, சரியாக 1972 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்த தமிழ் படம் இது. இந்த படத்தில் “யாருக்காக, இது யாருக்காக” என்ற கிளைமாக்ஸ் பாடலுக்கு பிறகு சிவாஜி கணேசன் இறக்கும் படி காட்சிகள் அமைக்கப்பெற்று வெளியானது. படம் நன்றாக இருக்கிறது, சிவாஜி கணேசன் இறக்காமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்ற ரசிகர்களின் எண்ணத்திற்கு ஏற்ப மீண்டும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மாற்றப்பட்டு சிவாஜி உயிர் பெற்று வருவது போல அமைக்கப்பட்டது.

#2. முகவரி, சரியாக 2000 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்ற இலட்சியத்தோடு வாழ்ந்து வரும் ஒரு நபராக இருப்பார். ஆனால் குடும்ப சூழல், தயாரிப்பாளரின் மூட நம்பிக்கை மற்றும் சில சங்கடங்கள் அவரை கடைசி வரை இசையமைப்பாளராக உருவெடுக்க விடாமல் வேறொரு வேலைக்கு போவது போல படம் முடியும். இந்த கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போக மீண்டும் அவர் இசையமைப்பாளராக உருவெடுப்பது போல காட்சிகளை மாற்றிபடம் ரீ-ரிலீஸ் ஆனது.

#3. ரமணா, 2002 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் விஜயகாந்திற்கு குறைந்தபட்ச தண்டனை கொடுத்து கோர்ட் விடிவித்துவிடும் படி படம் முடிக்கப்பட்டது. ஆனால் அங்கே படத்தின் ஈர்ப்பு குறைந்துவிட்டதாக தயாரிப்பாளர் கேட்டுக்கொள்ள. இறுதியில் விஜயகாந்திற்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டு இறக்கும் படி கிளைமாக்ஸ் மாற்றி அமைக்கப்பட்டது.

#4. புதியகீதை, 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான இந்த படத்தில் 25 வயதில் விஜய் இறந்து விடுவார் என்று ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டிருக்கும். அதே போல பல தடைகளைத் தாண்டி இருசக்கர வாகனத்தின் சின்ன ஸ்டாண்ட் அவரது இறப்பிற்கு காரணமாக இருக்கும், இந்த கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு பிடிக்கமால் போக விஜய் மீண்டும் எழுந்து வருவது போல கிளைமாக்ஸ் கட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டது.

#5. கிரீடம், 2007 ஆம் ஆண்டு அஜித் நடித்த இந்த படத்தில் வில்லனை கொன்றுவிட்டு அஜித் அவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, போலிஸ் ஸ்டேஷனில் அவரது புகைப்படம் “வான்டட் லிஸ்டில்” இருக்கும் படி கிளைமாக்ஸ் முடிக்கப்பட்டு இருக்கும். இது ரசிகர்களுக்கு பிடிக்காமல் போக அஜித் மீண்டும் போலிஸ் அதிகாரியாக ஆவது போல கிளைமாக்ஸ் மாற்றி அமைக்கப்பட்டது.

#Climax - மேலும் 2001 ஆம் ஆண்டு வெளியான சரத்குமார், முரளி, மனோஜ் ஆகியோர் நடித்த “சமுத்திரம்”, 2006 ஆம் ஆண்டு கமல் நடித்த “வேட்டையாடு விளையாடு” படங்களின் கிளைமாக்ஸும் மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top