சாதாரண மக்களும் தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க எளிமையான வழிமுறை..!!
  • 13:36PM Mar 15,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 13:36PM Mar 15,2019 Chennai

தேர்தலில் போது பண நடமாட்டம் குறித்த தகவல்களை வருமான வரித்துறையிடம் பொது மக்களும் தெரிவிக்கலாம். இதற்கான கட்டணமில்லா தொலைபேசியை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டிருந்தார். இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு,

தற்சமயம் முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது,அவ்வாறே இதுவரை ரூ.3 கோடியே 39 லட்சத்து 95 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அனுமதி பெறாமல் பொது மற்றும் தனியார் சுவர்களில் வரையப்பட்டுள்ள விளம்பரங்களும் நீக்கப்பட்டு வருகின்றன. 64,385 விளம்பரங்கள் நீக்கப்பட்டு இது தொடர்பாக, 12 வழக்குகள் பதிவாகியுள்ளது.

ஏர்போர்ட் , ரயில்வே ஸ்டேஷன், விடுதிகள், ஹவாலா முகவர்கள், பான் புரோக்கர்கள், பணத்தை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள நபர்களைக் கண்காணிக்க வருமான வரித்துறையை அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் யாரேனும் சந்தேகிக்கும் வகையில் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணத்தை எடுத்துச் சென்றால் அதனை கண்காணிக்க கூறியதாக அறிவித்துள்ளார்.

அதிக அளவு பணம் எடுத்துச் செல்லப்படுவது குறித்து மக்களுக்குத் தெரிய வந்தால் அதுகுறித்த தகவல்களை வருமான வரித்துறையினருக்கு 1800 425 6669 மற்றும் 044 - 2826 2357 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் அல்லது itcontrol.chn@gov.in என்ற இணையதள முகவரியிலும் தெரிவிக்கலாம்.

Top