#TN SMART : Technology-யில் கெத்து காட்டும் தமிழகம் - பேரிடருக்கு முன்பே மேற்கொண்ட முயற்சி!
  • 20:08PM May 04,2019 Tamil Nadu
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 20:08PM May 04,2019 Tamil Nadu

ஃபானி புயல் தாக்கத்தில் இருந்து தமிழகம் தப்பித்தாலும், புயலை எதிர்கொள்ளும் நுட்பத்தில் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் போக, தன்னார்வலர்கள் வானிலையை கணித்து சொல்லும் அளவிற்கு சகல துறைகளிலும் கோலோச்சி வருகிறது. அது போக நவீன ஆய்வு முறைகளையும், ஆய்வு மைய தரவுகளையும் வைத்து கல்லூரி மாணவர்களே வானிலை குறித்து அறிந்து கொள்ள கூடிய அளவில் mobile app-கள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பேரிடர் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் புதிய mobile app ஒன்று திருச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

#1. TN SMART app பதிவிறக்கம் செய்வதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் மழைமானி அமைக்கப்பட்டுள்ள 25 இடங்களின் மழையளவு, காலநிலை, வெள்ளம், சுனாமி, சூறாவளி, நிலநடுக்கம் மற்றும் தீவிபத்து ஏற்படும் காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் மற்றும் செயல்படக் கூடாது ஆகிய விபரங்கள் மற்றும் பேரிடர் தொடர்பான விழிப்புணர்வு அறிக்கைகள் ஆகிய விபரங்களை இச்செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

#2. பேரிடர்களால் ஏற்படும் மனித உயிரிழப்பு, வீடுகள் சேதம், போக்குவரத்து தடை, மின்கம்பி அறுந்து விழுதல், மின்கம்பம் விழுதல், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்படுதல், நீர்நிலைப் பிடிப்புகளில் அபாயகரமான அளவில் நீர்வரத்து ஆகிய விபரங்களை புகாராகவோ அல்லது தகவலாகவோ இச்செயலியின் மூலம் பதிவு செய்யலாம்.

#3. இதன் மூலம் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கும். எனவே பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இச்செயலியை TN-SMART google Play Store மூலம் பதிவிறக்கம் செய்து பேரிடர் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

#TN SMART : இது போன்ற தொழில்நுட்பங்களின் மூலம் மக்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வரும் பட்சத்தில், எத்தகைய புயல் மற்றும் இயற்கை பேரிடர் வந்தாலும், அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு மக்கள் திறன் பெற்று விடுவார்கள். புயல் தாக்குதல்களை எதிர்கொண்டு எதிர்கொண்டு, அதில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகளை பார்த்து  ஒடிசா மாநில மக்கள் புயல் பற்றிய புரிதல்களை பெற்று விட்டனர் என்பதை சமீப காலமாக வெளியாகும் தரவுகளை வைத்து அறிய முடிகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top