#Snake Worship: ஏன் இந்தியர்கள் பாம்பை வணங்குகின்றனர்? பாம்பை வணங்குவதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றது?
  • 15:48PM Sep 23,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 15:48PM Sep 23,2019 Kodambakkam

இந்து மதத்தில் நாக வழிபாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது, ஆதி மனிதன் எதனையெல்லாம் பார்த்து பயன்தானோ அதையெல்லாம் தெய்வமாக பார்த்து வணங்க ஆரம்பித்தான். உதாரணத்திற்கு காட்டில் ஏற்படும் தீயை பார்த்து பயந்து அதனை அக்னி தேவனாக நினைத்து வழிபட ஆரம்பித்தான். அதே போல பாம்பு கொத்தி மனிதர்கள் மாய்வதனை பார்த்து பயந்து பாம்பையும் தெய்வமாக நினைத்து வழிபட ஆரம்பித்தான். இவற்றை வணங்கினால் மீண்டும் நமக்கு ஆபத்து நேரிடாது என்ற நம்பிக்கை ஆதி மனிதனுக்கு மிக ஆழமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

7.jpg

ஆனால் ஆதி மனிதன் பாம்பை வணங்குவதற்கு வேறு காரணங்கள் இருப்பதாக சில சிவனடியார்கள் கூறுகின்றனர். நாம் நாகத்தை பாம்பாக மட்டுமே பார்க்கின்றோம் ஆனால் ஞானிகளாக விளங்கிய நம்முடைய முன்னோர்கள் பாம்பு வடிவத்தை மூலாதாரச் சக்கரத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் “குண்டலினி” சக்தியாகவே பார்த்துள்ளனர்.

9.jpg

ஓர் புற்றுக்குள் இருக்கும் பாம்பை தீண்டினாலோ அல்லது உசுப்பிவிட்டாலோ எப்படி சீறிக்கொண்டு புற்றிலிருந்து பாய்ந்து வெளியே வருமோ, அதேபோலவே யோகப்பயிற்சியால் சீண்டப்படும் குண்டலினி நமது முதுகுத்தண்டை பற்றிக்கொண்டு சரசரவென சீறி வெளியேறும் என்கின்றனர் சிவனடியார்கள். இதன் காரணமாகவே நாகத்தை கடவுள்களோடு சம்பந்தப்படுத்தி பார்த்துள்ளனர் பண்டைய ஞானிகள்.

8.jpg

ஆரம்பத்தில் கடவுள்களின் நம்பிக்கைக்குரிய விலங்காக பார்க்கப்பட்டும், சித்தரிக்கப்பட்டும் வந்த இந்த பாம்புகளை காலப்போக்கில் வணங்கவும் ஆரம்பித்துவிட்டனர் என்றும். நாகத்தை தீண்டினாலோ அல்லது கொன்றாலோ நாகதோஷம் உண்டாகும் என்றும் அது பரம்பரை பரம்பரையாக நமது வம்சாவளிகளை குறிவைத்து பழிவாங்கும் என்றும் நம்பினார்கள். உண்மையில் இந்த நாக வழிபாடு என்பது யோகிகள் குண்டலினி யோகத்தை குறிப்பதற்காக பயன்படுத்தியது தான் உண்மை என்கின்றனர் சிவனடியார்கள். ஆனால் இந்த உண்மைநிலை மறந்து இன்று கிராம தேவதைகளின் பட்டியலில் இந்த நாகங்களை நாக தேவதையாக சொல்லி வணங்க ஆரம்பித்துவிட்டனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top