#JapanBulletTrain என்றுமே நிக்காத ஜப்பான் புல்லட் ரயிலை அசால்ட்டாக நிறுத்திய ஒற்றை நத்தை!
  • 17:46PM Jun 26,2019 Japan
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:46PM Jun 26,2019 Japan

உலகின் தலைசிறந்த ரயில் நிறுவனங்களில் ஜப்பான் புல்லட் ரயில் நிறுவனமும் ஒன்று. நேரம் தவறாமைக்கு உலகளவில் இருக்கும் அனைத்து போக்குவரத்துக்கு நிறுவனங்களுக்கும் எடுத்துக்காட்டாக ஜப்பான் புல்லட் ரயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களின் போதும் ஜப்பான் புல்லட் ரயில்கள் பாதுகாப்பாக இயக்கப்படும். இவ்வளவு சிறப்பை கொண்ட இந்த நிறுவனம் கடந்த 30-ம் தேதி ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.

கடந்த மாதம் 30-ம் தேதி ஜப்பானின் தென்பகுதி வழித்தடத்தில் இயக்கப்பட 25 புல்லட் ரயில்கள் மின்கோளாறு காரணமாக முழுமையாக நிறுத்தப்பட்டது. அந்த வழித்தடத்தில் பயணித்த 12 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் அனைவரும் பாதிப்படைந்தனர். பலமணி நேர ஆய்வுக்குப்பின் எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிந்ததும் மீண்டும் புல்லட் ரயில்களை இயக்கினார். இந்நிலையில் எந்தக் காரணத்திற்காக மின்கோளாறு ஏற்பட்டது என்று ரயில்வே நிர்வாகிகள் ஆராய்ந்துள்ளனர்.

இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் போது ரெயில் பாதைக்குத் தொடர்புடைய எலக்ட்ரானிக் கருவியில் ஒரு நத்தை இறந்துகிடந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். கட்டுப்பாட்டு அறையில் உள்ள எலக்ட்ரானிக் கருவியை இந்த நத்தை கடக்க முயன்ற போது அதன்மீது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரானிக் கருவியில் மின்கோளாறு ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களையும் சமாளித்து இயங்கிய உலகின் மிகச் சிறந்த ரயில் நிறுவனம் ஒரு நத்தையால் தடைபட்டு நின்றது அனைவர்க்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சில ஜப்பான் மக்கள், ரயில்வே அதிகாரிகளின் கவன குறைவே இதற்குக் காரணம் என்று கூறியுள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top