“நீங்க நல்லா இருக்கணும்” மனதை நெகிழவைத்த சிவகார்த்திகேயன்!
  • 10:43AM Dec 06,2018 Kodambakkam
  • Likes
  • 0 Views
  • Shares

தமிழக விவசாயிகளுக்கு ஒரு மாபெரும் தூணாக இருந்தவர் “நெல் ஜெயராமன்”. கடந்த பல ஆண்டுகளாக அரியவகை நெல் வகைகளை கண்டறிந்து விவசாயிகள் மத்தியில் அதைப்பற்றிய தெளிவான விளக்கங்களையும், அறிவுரைகளையும் வழங்கி வந்தார் “நெல் ஜெயராமன்”. இரண்டு ஆண்டுகளாகத் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுவந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை திரைத்துறையைச் சேர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன், கார்த்தி, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் சந்தித்தனர். இதேபோல தி.மு.க தலைவர் ஸ்டாலின், சீமான், திருநாவுக்கரசர், வைகோ உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். இவர்களில் சிலர், மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளையும் ஏற்பதாக நிதியுதவியும் அளித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, காமராஜ் உள்ளிட்டோரும் சந்தித்துப் பேசினர்.

nel-jayaraman-c.jpg

இன்று அதிகாலை ஐந்து மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி “நெல் ஜெயராமன்” உயிரிழந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த தகவலை ஊடங்கங்களுக்கு தெரியப்படுத்தி உள்ளனர். பல ஆண்டுகளாக நெல்லுக்கென திருவிழாக்கள் எடுத்து சிறப்பித்து. பல விருதுகளை வாங்கியவர் நெல் ஜெயராமன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அவருடன் நெருங்கி பழகி வந்த நடிகர் சிவகார்த்திகேயன் செய்தி அறிந்ததும் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். அது மட்டும் இன்றி அவர் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் கூறியதோடு நெல் ஜெயராமன் அவர்கள் மகனின் படிப்பு செலவை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக வாக்களித்துள்ளார். சென்னையில் இருந்து அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்லும் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

Kanaa-Sivakarthikeyan-cricket-coacher.jpg

Share This Story

You Might Also Like These
Related Stories
Top