#Single Parent: குழந்தையை தூங்க வைக்க போராட்டமா? இந்த simple டிப்ஸ்கள follow பண்ணுங்க!
  • 11:52AM Jul 03,2019 Kodambakkam
  • Written By Gowri Shankar
  • Written By Gowri Shankar
  • 11:52AM Jul 03,2019 Kodambakkam

தனி நபராக குழந்தையை வளர்ப்பது என்பது நீங்கள் நினைப்பது போல அவ்வளவு சாதாரணமான காரியம் இல்லை. அப்படியே சமாளித்து பார்த்துக்கொண்டாலும் தினமும் அந்த மழலையை தனி ஆளாக தூங்க வைக்க அவர்கள் படும் பாடு அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரியான குணாதிசயங்கள் கொண்டவர்கள். இரண்டு அல்லது மூன்று வயதுடைய குழந்தை என்றால் கூட பரவாயில்லை. பிறந்தது முதல் ஒன்றரை வயது வரை குழந்தையை தனி ஆளாக தூங்கவைப்பது ஒரு விசித்திரமான சேலஞ்ச் தான். குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவைக்கவும் முடியாது. பிறகு எப்படி தான் குழந்தையை தூங்கவைப்பது. இதோ ஒற்றை பெற்றோருக்கான ஈஸி டிப்ஸ். இந்த எளிமையான குறிப்புகள் தம்பதிகளுக்கும் உபயோகமாக இருக்கும்.

3.jpg

குழந்தைகளின் அன்றாட நிகழ்வுகளுக்கு ஒரு அட்டவணை போட்டு வைத்துகொள்வது நல்லது. தினமும் ஒரே நேரத்திற்கு குழந்தையை தூங்க வைப்பதை வழக்கமாக வைத்து கொள்வதனால் தினமும் அந்த நேரத்திற்கு தானாக உங்கள் குழந்தைக்கு தூக்கம் வந்துவிடும். ஒரு வேளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியான நேரத்தை கடைபிடித்தால் தினமும் குழந்தையை தூங்க வைக்க நள்ளிரவு வரை காத்திருக்க நேரிடும்.

2.jpg

பிறந்து மூன்று மாதம் வரை பகல் வேளைகளில் குழந்தைகளை எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் தூங்க வைக்கலாம். அப்படி மூன்று மாதம் வரை குழந்தைகள் தூங்குவது அவசியம். ஆனால் நான்கு மாதத்திற்கு பிறகு பகல் வேளையில் குழந்தைகளை அதிக நேரம் தூங்க வைக்க வேண்டாம். பகல் ஒரு மணிநேரம், மதியம் இரண்டு மணி நேரம் மட்டும் தான் குழந்தைகளை தூங்க வைக்க வேண்டும். மாலை நேரங்களில் குழந்தைகளை விளையாட விடுவது அவசியம். அப்போது தான் இரவில் உணவளித்த பிறகு களைப்புடன் இருக்கும் குழந்தைக்கு நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும். அதே போல இரவில் வயிறு நிறையும் படி குழந்தைக்கு உணவளிக்க வேண்டும். அப்படி செய்தால் குழந்தைக்கு தொந்தரவு இல்லாத தூக்கம் கிடைக்கும்.

1.jpg

சிலர் குழந்தை சாப்பிட அடம் பிடிப்பதால் வெறும் பாலை மட்டும் கொடுத்து தூங்க வைத்து விடுவார்கள். அப்படி செய்தால் இரவில் அடிக்கடி குழந்தை அழுகையுடன் எழுந்து தொந்தரவு செய்யும். அந்த நேரத்தில் தாய் பால் கொடுக்காமல் அரை வாழைப்பழம் அல்லது தண்ணீர் கொடுத்து குழந்தையை தூங்க வைக்கலாம். மேலும் இரவில் குறைவான வெளிச்சம் தரும் லைட் லேம்ப்களை போட்டு குழந்தையை தூங்க வைக்க வேண்டும். உங்கள் மொபைல் ஃபோன்களில் இருந்து வரும் வெளிச்சம் கூட குழந்தைகளின் தூக்கத்தை தொந்தரவு செய்யும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top