#Shoelace : பேஸ்புக் என்ன பேஸ்புக் - அடுத்து என்ன நடக்க போகுது பாருங்க : அதிரடியாக கூகுள் களமிறக்கிய Shoelace.!
  • 08:58AM Jul 15,2019 New York
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 08:58AM Jul 15,2019 New York

facebook-க்கு போட்டியா ஏதாவது செய்யணும்னு google நிறுவனம் பிளான் பண்ணிகிட்டே தான் இருக்கு. இருந்தாலும் ஏதோ ஒரு இடத்துல சொதப்புது. முன்னாடி google plus-ன்னு சொல்லி ஒரு social media அறிமுகப்படுத்துச்சு. ஆனா எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்ப்பு இல்லாததால அதுக்கும் மூடு விழா கொண்டாடிட்டாங்க. இருந்தாலும் கெத்த விடக்கூடாதுல. அதுக்காக அடுத்து ஒரு சோசியல் மீடியா அறிமுகப்படுத்த போகுது கூகுள். இது google plus மாதிரி சாதரணமா இருக்காது.

மக்கள் ஒன்ன விரும்பனும்னா முதல்ல, அவங்க எதிர்பார்ப்ப தூண்டனும்னு நல்லா புரிஞ்சு வெச்சிருக்கு google. இதுக்கு முன்னாடி வெளியிட்ட google plus சர்வ சாதாரணமா கிடச்சனால அதோட அருமை பலருக்கும் தெரியாம போயிருச்சு. அந்த தப்ப இதுல பண்ணக்கூடாதுன்னு முடிவோட இருக்கு google. அதுக்காக Shoelace-ன்னு சொல்லி ஒரு சோசியல் மீடியா அறிமுகம் செஞ்சிருக்கு. இதோட கான்செப்ட்டும் பேஸ்புக் மாதிரி தான். இருந்தாலும் பேஸ்புக் விட யூசர் இன்டர்பேஸ் இதுல வித்தியாசமா இருக்கும். | போற வழியில அவசரமா.? அதுக்கும் வழி பண்ணி கொடுத்த google - பக்கா பிளான்!

google testing பிரிவான Area 120 உருவாக்கின இந்த Shoelace social media முதல் முறையா நியூயார்க் நகரத்துல மட்டும் தொடங்கி இருக்காங்க. இனி அடுத்தடுத்து உலகம் பூராவும் கொண்டு வார திட்டமிட்டு இருக்காங்க. மத்த சோசியல் மீடியா மாதிரி இல்லாம இந்த Shoelace social media-ல இருக்கவங்க எல்லாம் ஒன்னு சேந்து ஒரு task மாதிரி செய்ய முடியும். இது சமூக சேவை செய்யிறவங்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்னு எதிர் பார்க்கறாங்க. | இனி பாடமெல்லாம் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டாம்!!! அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம்!

பேஸ்புக் மாதிரி முகம் தெரியாதவங்கள ஈர்க்காம, இதுல இருக்கவங்கள நேரடியாவே சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கும். ஏதாவது ஒரு உள்ளூர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுதுன்னா, இந்த Shoelace-ல எங்க நடக்குதுன்னு தெரியும். நம்ம பிரெண்ட் லிஸ்ட்ல இருக்கவங்க கூட சேர்ந்து அதுல கலந்துக்க முடியும். இந்த மாதிரி நேரடி சந்திப்பு உருவாக்குற வித்தியாசமான சோசியல் மீடியாவ Shoelace இருக்க போகுது. இப்போதைக்கு testingல இருக்க Shoelace social media இன்னும் கொஞ்ச நாள்ல உலகம் பூராவும் வந்துரும். தினமும் புதிய மனிதர்கள சந்திக்க விரும்புறவங்களுக்கு இந்த Shoelace ரொம்பவே வசதியா இருக்கும். | இந்த app இருந்தா unknown நம்பரின் பெயர் மட்டுமல்ல ஜாதகத்தையே எடுத்திடலாம்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top